March 2017


தித்திக்கும் சுவையமுது மக்கறூன்: எண்ணற்ற வகைகள்; எண்ணற்ற சுவைகள்!
March 2017
நாவுக்குத் தித்திப்பும் உடலுக்கு உற்சாகத்தையும் தரும் பலகாரங்கள்

மென்மையும் மொறமொறப்பும்; கொண்ட ஐரோப்பாவின்பா ரம்பரிய இனிப்புப் பலகாரம்


எழுத்து: சுகந்திசங்கர் | படங்கள்: மகே~; பண்டார, கீத் விதுரங்க


நாம் காணும் காட்சிகள், கேட்கும் இசை எதுவானாலும் மனம் மகிழ்ந்தால், அதனை இனிமையாக இருந்தது எனக் கூறுகின்றோம். இந்த இனிமை என்ற சொல் இனிப்பு என்ற சுவையின் தன்மையில் இருந்து பிறந்ததாகும். சுவைகளிலேயே இந்த இனிப்பு சுவைக்குத்தான் மனதுக்கு இன்பத்தையும் ஒருவித புளகாங்கித உற்சாகத்தையும் அளிக்கக்கூடிய பண்பு உண்டு.


இனிப்பை அதிகம் உண்டால் திகட்ட ஆரம்பித்து வெறுப்புணர்வை உருவாக்கிவிடும். ஆனால், எவ்வளவுதான் உண்டாலும் திகட்டாத, இனிப்புச் சிற்றுண்டியாக மக்கறூன் உலகத்தில் பிரபல்யம் பெற்றுள்ளது. மென்மையானதும் மொறமொறப்புத் தன்மையும் கொண்ட மக்கறூன் அதன் சேர்மானங்களுக்கு ஏற்றவாறு எண்ணற்ற வகைகளைக் கொண்டிருக்கின்றன.


வண்ணவண்ணமாகப் பல்வகை நிறங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படும் மக்கறூன், வீடுகளிலும் மிக இலகுவாகத் தயாரித்துக் கொள்ளமுடியும். மாலைவேளைச் சிற்றுண்டியாகவும் கொண்டாட்டங்களின்போது விருந்தினர்களை வரவேற்கும் வெல்கம் சிற்றுண்டியாகவோ அல்லது மதிய, இரவு உணவின் பின்னர் உண்ணும் டெசர்ட் ஆகவோ அல்லது கேக் போன்றவற்றை அலங்காரம் செய்வதற்கோ மக்கறூன் பயன்படுத்தப்படுகின்றது. வடிவங்களில் பெரும்பாலும் வட்டவடிவிலேயே மக்கறூன் தயாரிக்கப்படுகிறது. நீள்முட்டை வடிவத்திலும் இப்போது தயாரிக்கப்படுகிறது. வடிவங்கள் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அமையலாம்.


மக்கறூன் உலகம் முழுவதும் பிரபல்யம் பெற்ற ஒரு சிற்றுண்டியாக விளங்குவதால், நாட்டுக்கு நாடு வேவ்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. பொதுவாக அந்தந்த நாடுகளில் இலகுவாகக் கிடைக்கும் மூலப்பொருள்களைப் பயன்படுத்துவதால் இந்த வேறுபாடு காணப்படுகிறது.


உதாரணமாக, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் தேங்காய் பெருமளவில் கிடைப்பதால், தேங்காய்த் துருவல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அடிப்படை செய்முறையில் மாற்றங்கள் கிடையாது. மக்கறூனின் தாய் வீடு பிரான்ஸ் நாடாக இருந்த போதிலும், இத்தாலி நாடு தனக்கென, செய்முறையில் புதுப்பாணியை வகுத்துள்ளது.


இத்தாலி செய்முறையில் ஐசிங் சீனி மற்றும் சீனி ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து சீனிப்பாணி 118 பாகை செல்சியசில் கொதிக்கும் போது, இந்தக் கரைசலில் சாயமூட்டியை சேரத்துக் கொள்ள வேண்டும். நிறமூட்டிகளாக ஸ்ரோபரி, மின்ரோ, லெமன், மங்கோ போன்ற நிறமூட்டிகளையும் பயன்படுத்த முடியும். ஆனால் பிரான்ஸ் முறையில் முட்டையின் வெள்ளைக் கருவை நுரைவரும் வரை நன்றாக அடித்து, பின்னர் வர்ணம் சேர்க்கப்படுகிறது. இத்தாலி முறையில் தயாரிப்பதானால் அதிகநேரம் எடுக்கும்.

மக்கறூன் என்ற இந்தச் சீர்மையான சிற்றுண்டி குறித்த விபரம், 1725 ஆம் காலப்பகுதியில் வெளிவந்த றொபேர்ட் ஸ்மித்தின் ஆங்கில நாட்டுச் சமையல்கள் என்ற புத்தகத்தில் காணப்படுகிறது.


எடுத்துக்காட்டாக பாதாம் பருப்பு ஸ்ரோபரி சொக்கலட் மக்கறூனை பிரான்ஸ் முறையில் தயாரிக்கும் செயல்முறையைப் பார்ப்போம். தேவையான பொருள்கள்: பாதாம் பருப்புப்பவுடர், ஐசிங்சீனி, முட்டை வெள்ளைக்கரு, சீனி, சாயமூட்டி, ஸ்ரோபரி, சொக்கலெட் கனா, பாதாம் பருப்பு பிளேவர் லிக்கர் ஆகியவையாகும்.


இங்கு ஐசிங்சீனி, சீனி, பாதாம் பருப்பு பவுடர் இரண்டிலிருந்து ஒன்று என்ற கலவை அடிப்படையில் கலத்தல் வேண்டும். அதாவது, முதலில் ஐசிங்சீனி அரைவாசியுடன் சீனியைக் கலக்க வேண்டும். அதேவேளை பிளன்டர் இயந்திரத்தில் முட்டை வெண்கருவை விட்டு, நுரை வரும்வரை அடிக்க வேண்டும். பின்னர் சீனி கலந்த ஐசிங் சீனியில் அரைவாசியை முட்டையுடன் கலந்து, அடிக்க வேண்டும். ஓரளவு கலந்த பின்னர் மிகுதி ஐசிங்சீனியையும் பிளைன்டருக்குள் போடவேண்டும்.


மிகுதி வைத்திருந்த ஐசிங்சீனியை பாதாம் பருப்பு பவுடருடன் சேர்த்து பிளைன்டருக்குள் சிறிதுசிறிதாகச் போட்டு, ஒன்றாகக் கலக்க வேண்டும். இதன்பின்னர் நிறமூட்டியை அளவாக விட்டு, அதையும் நன்றாக அடிக்க வேண்டும். அதன்பின்னர், பிதுக்கி; உபகரணத்தில் கலவையை இட்டு, சிலிக்கன் மற் எனப்படும் தகட்டில் பிழிய வேண்டும். பிழியும்போது கைக்கணக்குக்கு ஏற்றவாறு ஒரேயளவான சிறிய வட்டங்களாகப் பிழியவேண்டும். காரணம், இறுதியில் இரண்டு வட்டத் துண்டுகளை ஒன்றாகச் சேர்க்கும்போது, அளவில் ஒன்றுபெரிது இன்னொன்று சிறிதாக இருந்தால், மக்கறூனின் வசீகரத்தை இல்லாமல் செய்துவிடும். சிலிக்கன்மற் இல்லாதவர்கள் ஒயில்பேப்பரைப் பயன்டுத்தலாம்.


இவ்வாறு, தட்டுக்களில் பிழியப்பட்ட கலவையை 30 முதல 45 நிமிடங்கள் வரையில் வளியில் உலரவிட வேண்டும். விரலினால் இலேசாகத் தொட்டுப் பார்க்கும்போது, விரலில் ஒட்டாத பதம் வந்தவுடன் ஒவனில் வைக்க வேண்டும். ஒவனில் 130 செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 17 தொடக்கம் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். சேர்மானப் பொருட்களையும் வடிவங்களையும் பொறுத்து, வெப்பநிலையையும் நேரத்தையும் மாற்றிக்கொள்ளுதல் வேண்டும்.


ஒவனில் இருந்து வெளியே எடுத்தவற்றை, சற்று சூடு அறிய பின்னர் சொக்கலட் கிறீம் சிறிதளவு தடவி, இரண்டு துண்டங்களை ஒன்றாக ஒட்டுதல் வேண்டும். அவரவர் தம்முடைய அழகு இரசனைக்கு ஏற்றவாறு மக்கறூனை அழகுபடுத்தலாம்.


ஏற்கெனவே, தேவையான பொருட்கள் வரிசையில் பாதாம் பருப்புபிளவர் லிக்கர் பற்றிக் குறிப்பிட்டிருந்தோம். மக்கறூனின் இனிப்பு சுவையை மேலும் விறுவிறுப்பாக்கும் பொருட்டு, லிக்கர் கலப்பதுண்டு மேற்கத்தைய நாடுகளில் இந்தவகை மக்கறூன் சர்வசாதாரணமாக கிடைக்கும். ஆனால், இலங்கையில் விசேடமாக ஓடர்கொடுத்தே பெற்றுக்கொள்ள முடியும்.


பொதுவாக, மக்கறூன் சிற்றுண்டியை காற்றுப்புகாத கொள்கலனுள் வைத்து, டீபிறஷருக்குள் சுமார் ஒரு மாதம் வரையில் பாதுகாத்துக் கொள்ளலாம்.


மக்கறூன் என்ற இந்தச் சீர்மையான சிற்றுண்டி குறித்த விபரம், 1725 ஆம் காலப்பகுதியில் வெளிவந்த றொபேர்ட் ஸ்மித்தின் ஆங்கில நாட்டுச் சமையல்கள் என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. அதில் முட்டை வெள்ளைக் கருவுடன் பாதாம் பருப்புத்தூளும் கலந்து செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இத்தாலியில் 1792 ஆம் ஆண்டளவில் கன்னியாஸ்திரிகள் மடத்தில் முதன்முதல் தயாரிக்கப்பட்டதாக வரலாற்றுக்குறிப்புகளில் காணப்படுகின்றது.


(இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களை கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் பலகாரங்கள் பிரிவில் உதவி தலைமைச் சமையல்காரரான குசும் பெர்ணான்டோ வழங்கியிருந்தார்)


Macaroons are a small, sweet circular cake that originated in Medieval Italy and were popularized in France. The Sri Lankan variety is made with shredded or dessicated coconut that adds a crunchy, milky sweetness. Macaroons can be infused with an array of flavours and colours. This article, based on information from the Colombo Hilton, includes an easy recipe for homemade macaroons.


 • image01
  image01

  வண்ணவண்ண நிறங்களில் மக்கறூன் பலகாரங்கள்

  Prev Next
 • image01
  image01

  மக்கறூன் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள்

  Prev Next
 • image01
  image01

  சிலிக்கன் மற்| மீது கலவை பிழியப்படுகின்றது

  Prev Next