July 2018


மனநலம், உடல்நலம், குணநலம் தந்து ஆபத்துகளைத் தடுக்கும் ஏரோபிக்
July 2018
ஏரோபிக் பயிற்சிகள் மூலம் வசீகரமான வடிவம் வந்தடையும்

அம்மியில் அரைத்தும் உரலில் இடித்தும் சந்தைக்குச் சென்று பாரமான கூடையைத் தூக்கியும் கால்நடையாக நடந்தும் என அன்றாட வேலைகள் செய்வதன் ஊடாகவே உடலுக்கு உரமேற்றிய காலம் மலையேறிப் போய்விட்டது. வாழ்க்கை முறைகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிவிட்டன. மேற்கூறிய வேலைகள் மூலம் உடலுக்குக் கிடைத்த நல்ல பல பயன்களை இன்றைய காலத்தில் தரும் பயிற்சிதான் ~ஏரோபிக்|.


எழுத்து: சுகந்தி சங்கர்


'நல்ல உடலில் நல்ல மனம் அமையும்" என்பது முதுமொழி. அந்த நல்ல மனம் குடிகொள்வதற்கான நல்ல உடலைத் தருவதுதான் ஏரோபிக். மனமகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் கைகூடி இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தந்து, எடுப்பும் சிறப்பும் மிகுந்த உடலமைப்பை வரப்பிரசாதங்களாகக் கிடைக்கச் செய்யும் என்று உலகளவில் விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


மூளையின் திறன் அதிகரிக்கும்

அமெரிக்காவிலுள்ள இலினொய்ப் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றில், ஒன்பது முதல் பத்து வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு ~ஏரோபிக்| பயிற்சி மூலம் கற்கும் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த ஆய்வு 48 சிறுவர்களிடம் நடாத்தப்பட்டது. அவர்களிடம் வரைபடத்திலுள்ள பெயர்களையும் இடங்களையும் நினைவில் கொள்ளுமாறு கூறப்பட்டது. அச்சிறுவர்கள், அதை நினைவுகூர்ந்து கூறிய ஆய்வின் முடிவில், உடற்பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியமாக இருக்கும் சிறுவர்களின் நினைவாற்றல் மற்ற சாதாரண சிறுவர், சிறுமிகளை விடவும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இந்த ஆய்வின் மூலம், பாடசாலை செல்லும் சிறுவர், சிறுமிகளுக்கு கல்வி கற்கும் திறன், நினைவாற்றல் என்பன அதிகரிக்க, ~ஏரோபிக்| பயிற்சிகள் நல்ல பலன் அளிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.


ஹாவர்ட் மருத்துவக் கல்லூரியின் மனோதத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜோன். ஜே. ராடே என்பவர், உடற் பயிற்சிகள் மூளையின் செயற்பாட்டை அதிகரிக்கின்றன என்றும் ஒரு விடயத்தைக் கூர்ந்து கவனிக்கும் திறன், மனத்தில் உள்வாங்கும் ஆற்றல் மற்றும் நினைவில் இருத்தும் சக்தி ஆகியவற்றை அதிகரித்திருப்பதாக ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். உடற் பயிற்சிகளில் ~ஏரோபிக்| வகை மிகவும் சிறந்தது என்பது இவரது கண்டுபிடிப்பாகும்.


வயது வந்தவர்கள் மற்றும் வயதானவர்களுக்கும் கூட, மூளையின் இயல்பான திறன் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் ~ஏரோபிக்| சிறப்பாகப் பங்காற்றுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பல்வேறு வகையான மூளைச் சோதனைகளில், சிந்தித்தல், கற்றுக்கொள்ளுதல் மற்றும் பகுத்தறிதல் போன்ற அறிவாற்றல் திறன்களை ~ஏரோபிக்| பயிற்சி மேம்படுத்துவதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


கொழுப்புக் கரையும்

~ஏரோபிக்| பயிற்சிகளின்போது, உடலின் தசைகள் அதிகளவு வலுவடைவதால், உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. ஊளைச் சதையை ஒழிப்பது போலவே, ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமையவும் ~ஏரோபிக்| பயிற்சிகள் உறுதுணை புரிகின்றன.

ஏரோபிக்| பயிற்சிகள் தசை, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மேலும் தசைப் பாதிப்பு வராமல் தடுப்பதுடன் படிப்படியாகச் சுகம்பெறவும் வழி வகுக்கின்றது.


வாரத்துக்கு தொடர்ந்து 3-4 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுவதுடன் முறையான ஊட்டச்சத்தும் உட்கொண்டால், திட்டமிட்டபடி இரண்டு மாதத்தில் எடை இழப்புக் கிடைக்கும் என்பது பல சந்தர்ப்பங்களில் உறுதியாகியுள்ளது.


~ஏரோபிக்| பயிற்சிகள் தசை, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மேலும் தசைப் பாதிப்பு வராமல் தடுப்பதுடன் படிப்படியாகச் சுகம்பெறவும் வழி வகுக்கின்றது. அத்துடன் முகம், தோள், தசை, திசு ஆகியவற்றில் நெரிவு அல்லது சிதைவு போன்ற உபத்திரவங்களுக்கும் ஏரோபிக் பயிற்சிகள் சிறந்தன என ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. மேலும் இதயம், நுரையீரல் ஆகியவற்றின் உழைப்பாற்றலை மேம்படுத்துவதுடன் நீரிழிவு, புற்றுநோய்கள் உட்படப் பல நோய்கள் வருவதற்கான ஆபத்தையும் தடுக்கிறது இந்த ஏரோபிக் பயிற்சிகள்.


ஏரோபிக்

ஏரோபிக் என்பதன் பொருள் உத்வேகம், மனஉறுதிப்பாடு, உடலாரோக்கியம் என்பதாக அமைகின்றது. நடனத்தையும் உடற்பயிற்சியையும் சேர்த்து அதிகமான சக்தியைச் செலவிட்டுச் செய்யும் ~ஸ்ட்ரெச்சிங்|, ~லிஃப்டிங்|, ~கார்டியோ வேர்க்அவுட்| என அனைத்தையும் கலந்து வார்த்த கலவையாகும்.


பாரம்பரிய ஏரோபிக் உடற்பயிற்சி முறையை அறிமுகப்படுத்தியவர் பிரபல நடிகை ஜேன் பாண்டா என்பவராவார்.


பயிற்சிகள் படிப்படியாக விரைவான வேகத்தை எட்டுவதால் ஆடை எளிதானதாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். காற்சட்டை, மேற்சட்டை (ரிஷேர்ட்ஸ்) டவல், ஒரு தண்ணீர் போத்தல் (கிளாசில்; குடிப்பதுபோல் குடிப்பதில்லை; 1-2 சிறிய உறிஞ்சல்கள் மட்டும்) என்பன அவசியமாகும்.


குழுக்கள் ஏரோபிக்கில் 12 பேர் பங்குபற்றுவார்கள். 45-60 நிமிடங்கள் பயிற்சிக்கான கால அளவாகும். ஏரோபிக்குக்கான இசை தனித்துவமானது. அதற்கென்று சில விதிகளுடன் அமைந்த இசைப் பண்புகள் உண்டு. மெல்லிசை மற்றும் தாளங்களுடன் கூடிய டெம்போவும் நடனமும் மனதில் ஒரு மென்மையான அமைதியை உருவாக்கக்கூடியதாக அமைந்திருக்கும்.


சிலவகை, இலத்தீன் - அமெரிக்க இசையை அடிநாதமாகக் கொண்டு, அழகியல் உணர்வுகளைத் தூண்டும் தாளக் கட்டுகளைக் கொண்டவையாக இருக்கும்.


ஏரோபிக் பயிற்சிகளின் போது, ஆடற்கலை ஒன்றும் இணைந்து அரங்கேறும். பலே, டியூப், டேங்கோ, ரொக், ஸ்பனிஷ் போன்ற நடன அசைவுகள் கலந்ததாகவே ஏரோபிக் உடற்பயிற்சிகள் காணப்படுகின்றன.


ஏரோபிக் பயிற்சிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை, குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் வைத்தியரிடம், பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்று ஆரம்பிப்பது பாதுகாப்பானது. அதே சமயம், தேவைக்கும் மிக அதிகமாக பயிற்சி செய்வதும் விரும்பத்தக்கதல்ல.


ஏரோபிக் பயிற்சிப் போட்டிகள் சர்வதேச அளவில் 1999 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதனை ஏரோபிக் மற்றும் உடற்பயிற்சி சர்வதேசக் கூட்டமைப்பு நடாத்துகிறது.


(இக்கட்டுரைக்கு உறுதுணையான தகவல் களைத் தந்துதவியிருந்தவர், ~ஏரோபிக்| பயிற்சி யாளர் ஏ.எம்.டபிள்யூ. வசந்தகுமார ஆவார்)


There is a greater need for daily exercise today to stay physically and mentally healthy. Therefore, physical activities such aerobics are popular, especially due to the combination with dance and music. Aerobics includes stretching, weight training and cardio. Bale, Spanish, tube and tango dance movements are also a part of the routine. The music has a good beat, which also keeps the mood light and motivating. Comfortable active wear such as leggings, track bottoms, jogging suits and sports vests are worn. While a session will continue for upto an hour, water should be limited to a few sips during the breaks.

 • image01
  image01

  மனதார ஏற்று, இரசனையோடு ஏரோபிக்| பயிற்சிகளில் ஈடுபடும்போதுதான் பலன்கள் கனியும்.

  Prev Next
 • image01
  image01

  ''ஒடி விளையாடு பாப்பா....'' என்ற பாரதியின் பாடலை நனவாக்கித் தந்திடும் காலமாற்றத்துக்கு ஏற்ற பயிற்சிகள்.

  Prev Next