September 2017


ஷஸ்பா உருவாக்கும் அழகுதேவதைகள்
September 2017
உடலின் அனைத்து நரம்பு முனைகளும் முடியும் இடம் கால்கள். அதற்குச் செய்யும் ~ஸ்பா| ஒட்டுமொத்த உடலுக்கும் புத்துணர்வூட்டும்.

~ஸ்பா| என்பது நீர் மூலம் உடல் நலம் பெறுவதாகும். அதாவது, உடல் மற்றும் மன நலத்துக்கு உதவும் இயற்கையான மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும்.


எழுத்து: சுகந்தி சங்கர்


ஆறு நாட்கள் ஓடிஓடி உழைத்த பின்னர் ஏழாவதுநாள், உடல் இயற்கை யாகவே ஓய்வை வேண்டி நிற்கும். உடல் களைப்பு நீங்க, யாராவது உடம்பைப் பிடித்து விட மாட்டாங்களா, என்று தோன்றும். கை, காலைப் பிடித்துவிட்டால் இதமாக இருக்கும் என்று நினைப்போமில்லையா?


உடல், மனம் இரண்டினுடைய களைப்பைப் போற்றி உற்சாகமான மனநிலையை அனுபவிப் பதற்குச் மிகச்சரியான இடம்தான் ~ஸ்பா|.


~ஸ்பா| உடலில் உள்ள களைப்பை நீக்கி, மனதுக்கு புத்துணர்வூட்டி, செயற்றிறனை அதிகரிக்கின்றது. இதன் பெறுபேறாக, சருமம் பளபளப்புப் பெற்று, உடல் பொலிவுடன் அழகு அதிகரிக்கிறது. நோய்களை குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறே மெல்லிய இசையை கேட்டுக் கொண்டே, ஓய்வில் இருக்கையில் உடலுக்கு அபாரமான புத்துணர்ச்சி கிடைக்கும்.


வசதியானவர்கள் வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை ஸ்பா எடுத்துக்கொள்ளலாம். மன அழுத்தம் உள்ள வர்கள், தூக்கமின்மையால்தவிப்பவர்களுக்கு இது மிகவும் உகந்தது. ஒவ்வொருவரின் உடல்வாகு மற்றும் பிரச்னைகளைப் பொறுத்து, ~ஸ்பா| மாறுபடும். அவரவர்களுக்கான காலமும் மூலிகைகளும் வேறுபடும்.


~ஸ்பா| என்பது நீர் மூலம் உடல் நலம் பெறுவதாகும். அதாவது, உடல் மற்றும் மன நலத்துக்கு உதவும் இயற்கையான மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும். கிளியோபாட்ரா கழுதைப் பாலில் குளித்ததையும் அந்தப்புர ராணிகள் பாலும், தேனும் கலந்து குளித்ததையும் இலக்கியங்களில் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? அத்தகைய ஆடம்பரக் குளியல்களின் அதிநவீன வடிவமே இன்றைய காலத்தில் ~ஸ்பா| ஆகும்.


~ஸ்பா| என்ற சொல்லின் பிறப்பிடம் பெல்ஜியம் ஆகும். 'சனிடாஸ் பெர் அக்யூயம்" (நீர் மூலம் உடல் நலம்) என்ற இலத்தின் வாக்கியத்தின் சுருக்கம்தான் ~ஸ்பா| ஆகும். தாது உப்புகளும் மூலிகைகளும் நிறைந்த நீரினால் ஆன ஆனந்தக் குளியல் என அகராதியில் விளக்கம் தரப்பட்டிருக்கிறது.


~ஸ்பா| வகைகள்
முகத்தை அழகு படுத்துதல் தொடங்கி, தலைக்கான மசாஜ், கை, கால்களுக்கான மசாஜ், உடம்புக்கான மசாஜ் என்று நிறைய வகைகள் இருக்கின்றன. அத்துடன், மூலிகை நீராவிக் குளியல், நறுமண மலர்க் குளியல், அரோமா தெரபி, மூலிகை மண் சிகிச்சை, தலைமுடி பராமரிப்பு, நக பராமரிப்பு எனப் பலவகைகள் உள்ளன. அத்துடன் ஊட்டச்சத்து மற்றும் தியானம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. ~ஸ்பா|வுக்காக உபயோகிக்கும் பொருட்கள் எல்லாமே, இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகின்றன.

கண்டி மன்னர்கள் அனுபவித்த மூலிகைஇ நீராவிக் குளியல்கள்இ எண்ணெய்இ மணல்இ கூழாங்கல் ஒத்தணங்கள்இ ஓவியங்கள்இ இசை உடல் ஆரோக்கியத்துடனும் அழகுடனும் தொடர்புபட்டது.


உலகத்தில், இலங்கைக்கென்று பல தனித்துவமான பெறுமானங்களும் அடையாளங்களும் உண்டு. அவை, கலைகளாகவும் கலாசாரங்களாகவும் மருத்துவம், இயற்கை வளங்களாகவும் கொட்டிக்கிடக்கின்றன. இவற்றைப் பார்த்தும் இரசித்தும் அனுபவித்தும் உணரவும் வெளிநாட்டினர் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளாகப் படையெடுக்கின்றனர்; இது கண்கூடு.


இத்தகைய பெறுமானங்களும் அடையாளங்களும் இலங்கையின் வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே இலங்கைக்கு ஸ்ரீலங்கா என்ற நாமம் சூடப்பட்டது. அதற்கு முன்னர் அது நீண்டகாலமாக சிலோன் என்றே அழைக்கப்பட்டு வந்தது.


இலங்கையில் மன்னர் ஆட்சிக்காலத்தில், மன்னர்களும் அவர்களது பட்டத்து இராணிமாரும் அரச உயர் குலத்தோரும் ஆயர்வேத மருத்துவ முறையிலமைந்த, நோய் வருமுன் காக்கும் வழிமுறைகளைப் பின்பற்றி, நோயற்ற வாழ்வுடனும் குறைவற்ற செல்வத்துடனும் வாழ்ந்தனர்.


குறிப்பாகக் கண்டி மன்னர்கள் பயன்படுத்திய மூலிகைக் குளியல்கள், எண்ணெய் ஒத்தணம், மணல் ஒத்தணம், சிறிய கூழாங்கல் ஒத்தணம், மூலிகை நீராவிக் குளியல்கள், ஓவியங்கள், இசைமரபுகள் ஆரோக்கியத்துடனும் உடல் அழகுடனும் தொடர்புபட்டனவாகக் காணப்படுகின்றன.


அரண்மனைகளுக்குள் இருந்த இத்தகைய ஆரோக்கிய அழகுச் சமாச்சாரங்களை நாகரிக காலத்துக்கு ஏற்ற வகையில் வியாபார நுணுக்கத்துடன் பிரயோகிக்கப்படுகிறது.


இரத்தினபுரியிலிருந்து எடுக்கப்படும் ஒருவகை பளிங்கு போன்ற கூழாங்கற்கள் கொண்டு அளிக்கப்படும் ஒத்தணம், இரத்த அழுத்தத்தைச் சீர்படுத்துவதுடன் மூட்டுகள் மற்றும் உடலில் இருக்கும் முக்கியமான அக்குபிரஷர் புள்ளிகளையும் தூண்டுகின்றன.


இதேபோல்த்தான், மூலிகை மண் பொட்டல ஒத்தணமும் மூட்டு வருத்தங்களைக் குணமாக்குவதுடன் இரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி உற்சாகமாகத் தொழிற்படச் செய்கின்றது.


ஆயுர்வேதத்தில் அழகை மெருகூட்டி, மனதுக்கு புத்துணர்ச்சி தரும் திரவியங்களைப் பொறுத்தவரையில் தாமரை, மஞ்சள், நீராம்பல், பாதாம், மல்லிகை, வேம்பு, சந்தனம், வெந்தயம், தயிர், எலுமிச்சை, குங்குமப்பூ, ரோஜா, பால், துளசி, கஸ்தூரி மஞ்சள், கற்றாழை, மற்றும் சாம்பிராணி போன்றவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.


சாம்பிராணி என்ற இந்த அரியவகைத் திரவியம் பெத்தலேகேமில் இயேசுக்கிறிஸ்து பிறந்திருக்கும்போது, அவரைத் தரிசிக்கக் கீழைத்தேசத்திலிருந்து சென்ற மூன்று இராசாக்களில் ஒருவர் எடுத்துச் சென்றிருந்தார் என பரிசுத்த வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தைலத்தை மணிக்கட்டில் தடவி, முகர்ந்தால், மூலிகை மணம் சுவாசத்தைச் சீராக்க, அயர்ச்சி, தளர்ச்சி, மனஉழைச்சல் நீங்கி புத்துணர்வு பிறக்கும்.


நாம் அனைவருமே உடல் நலம், மன நலம் மற்றும் தோற்றத்தைச் சீராகப் பராமரித்துக்கொள்வது முக்கியம். ஆண், பெண் இருவருமே தங்களைப் புதுப்பித்துக்கொள்வதன் மூலம், உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும். (இந்தக் கட்டுரைக்குத் தேவையான தகவல்களை 'ஸ்பா சிலோன்" வழங்கி உதவியிருந்தது).


Spas and therapuetic treatments are becoming increasingly popular in Sri Lanka. Ayurvedic treatments from ancient Ceylon have been revived where therapies soothe the senses thereby relaxing and rejuvening the body and mind. Information for the article was provided by Spa Ceylon.

 • image01
  image01

  புத்துணர்வூட்டும் இலங்கைக்கே உரித்தான பண்டைய ஓவிய மரபுகள்இ ~ஸ்பா|வில் புதுமையாகப் புகுத்தப்பட்டுள்ளது

  Prev Next
 • image01
  image01

  ஒத்தணங்கள் பலவகை; ஒவ்வொன்றின் விளைவும் ஒவ்வொரு வகை

  Prev Next
 • image01
  image01

  ~ஸ்பா|வுக்கு முன்னதாக குடிப்பதற்கும் உண்பதற்குமான மூலிகைப் பதார்த்தங்கள்

  Prev Next