பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்..
October 2017


நீலமும் மஞ்சளும் கலந்த பஞ்சவர்ணக்கிளிகளுடன் ர்யசடநஙரin வகை பஞ்சவர்ணக் கிளி. இது 'ஹைபேர்ட்" பஞ்சவர்ணக் கிளிகளின் முதல் தலைமுறையாகும்.

இலங்கைக்கு பெருமை சேர்க்கும் ~ஹம்பாந்தோட்டை பறவைகள் ஆராய்ச்சி நிலையம்


எழுத்து: சுகந்திசங்கர் | படங்கள்: மஹே~; பண்டார, வி~;வதன் தர்மகுலசிங்கம்


மனிதர்கள் இன்றி, பறவைகள் வாழும்; ஆனால், பறவைகள் இன்றி மனிதனால் வாழ முடியாது. காரணம், மனிதன் வாழ்வதற்கு ஏதுவாக சுற்றுச்சூழலை சமநிலையில் வைத்திருப்பதற்கு பறவைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன.


மணிக்கணக்காக அப்படியே ஒரு மின் கம்பியில் உட்கார்ந்திருக்கும் மணிப்புறா, அவ்வப்போது படபடவென்று சிறகுகளை அடித்துக்கொண்டு, மேலெழுந்து ஒரு வட்ட மடித்து, மறுபடியும் அதே இடத்தில் உட்கார்ந்து கொள்ளும். இதுபோன்ற புரிந்தும் புரியாத, செயல்களாலும் அவற்றின் குரல், நிறம் போன்றவற்றாலும் பறவைகள் எம்மைப் பெரிதும் ஈர்க்கின்றன.


உலகமே உள்ளங்கைக்குள்அடங்கி விட்டாலும், நகரவாழ்க்கையில் மனிதன் வெறுமைக்குள் தவிக்கிறான்; 'எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி.. அங்கே எனக்கோர் இடம் வேண்டும்" என்று அலைகின்றான். இத்தகைய நிம்மதியையும் ஈர்ப்பையும் தரக்கூடிய இடம்தான் ஹம்பாந்தோட்டையில் பறவைகள் ஆராய்ச்சி நிலையம் (டீசைனள சுநளநயசஉh ஊநவெநச).


கொழும்பிலிருந்து அதிவேக நெடுஞ்சாலைஊடாகப் பயணித்து, மாத்தறை, ஹம்பாந்தோட்டை நகரங்களைக் கடந்து, கட்டுவேவா சந்தியில் இடது பக்கம் திரும்பி, ஏழு கி.மீ பயணிக்கும்போது, இந்தப் பறவைகள் சொர்க்கபுரியை அடையலாம்.நாகர வாவியை அடுத்து, ஏறத்தாள 35 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள பறவைகளை, பறக்க முடியாத பறவைகள், மயில்கள், கிளிகள், நீரில் வாழ்பவை எனப் பெரும்பாக பறவை இனக் குடும்பங்களாக வகைப்படுத்தி, அவற்றுக்கென தனித்தனியாக, பாதுகாப்பான, வேறுவேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெரும்பாக பறவை குடும்பத்துக்குள் அடங்கும் பறவைகள் அவற்றின் உப பிரிவுகளுக்கு ஏற்ப, தனித்தனியே விசாலமான கூடுகளுக்குள் சுதந்திரமாக உலாவவும் பறக்கவும் தக்க வகையில் விடப்பட்டுள்ளன.


பறவைகளை விரும்புவோர், கம்பி வலைக் கூட்டுக்கு வெளியில் நின்று, பறவைகளின் வாழ்வியல் முறை, நடமாட்டம், பண்புகள், இனவிருத்தி, முக்கியமாக அவற்றின் கொள்ளை அழகு போன்றவற்றைப் பார்த்து, அனுபவித்து உணரமுடியும். இந்தப் பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தில் காணப்படும் பறவைகள் அனைத்தும் வெளிநாட்டுப் பறவைகளாகும். 170 இனங்களைச் சேர்ந்த 3,200 பறவைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.


பஞ்சவர்ண கிளிகள் (ஆயஉயற ரூ ஊழஉமயவழழ ணுழநெ) பகுதியில் இனங்கள் 3000 முதல் 4000 வரையிலான பறவைகள் காணப்படுகின்றன. நீலம், மஞ்சள், பச்சை, சிவப்பு ஆகிய வர்ணங்களிலான கிளிகள் இங்கு உள்ளன. பஞ்சவர்ணக்கிளிகளுக்கு நீண்ட வால்கள் இருக்கும். ஏறத்தாள இவை 75 முதல் 80 செ.மீற்றர் வரையான நீளத்தில் இருக்கும். இவற்றின் தாயகம் மெக்ஸிக்கோ, தென், வட அமெரிக்கா ஆகும். கிளி இனப் பறவைகளுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது. காலையில் பஷன் பழம், கொய்யாப்பழம் போன்றவையும் மத்தியானம் 12 மணிக்கு தானிய வகைகளான சூரியகாந்தி விதை, முளைத்த பயறு, கடலை, கௌப்பி, வாதுமைக் கொட்டை போன்றவை சலாட்டுடன் சேர்த்து வழங்கப்படுகின்றது. மாலையில் முன்றரை நான்கு மணியளவில் சோளன், கரும்பு போன்றவை வழங்கப்படும். இவற்றை இரவில் பசியெடுக்கும் போதும் காலையிலும் உண்ணக்கூடியவாறு வழங்கப்படுகின்றது.


இங்குள்ள செந்நீல பஞ்சவர்ணக்கிளி (ர்லயஉiவொ ஆயஉயற) உலகிலேயே அருகிவரும் ஒரு பஞ்சவர்ணக்கிளி இனமாகும். செல்லப் பிராணியாக வீடுகளில் வளர்ப்பதற்கு அநேகர் இதனை விரும்புவதனால் இந்த இனம் அழிவடைந்து செல்கிறது. அதனால் சர்வதேச இயற்கை பாதுகாப்புச் சங்கம் சிவப்புப் பட்டியலில் இட்டுள்ளது. கிளி வகைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன. இவற்றில் சில உலகிலுள்ள அரிய கிளி வகைகளாகும்.


மயில் மற்றும் கோழி பகுதியில் (Pநயஉழஉமஇ Phநயளயவெ) இங்கு 11 க்கும் அதிகமான கோழி இனங்களும் வெள்ளை மயில், கறுப்பு மயில் உட்பட பல அரிய வகை மயில் இனங்கள் இங்கு கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளன. மயில், கோழி இனப் பறவைகளுக்கு முழுநாளும் உண்ணத் தக்கவாறு காலையில் மட்டும் ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது. வெள்ளை மயில்கள் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டவையாகும். இவை சாதாரண வெப்பநிலையில் வாழக்கூடியவையாகும். வெப்பநிலை குறைந்த மழைக்காலங்களிலேயே நோய்வாய்ப்பட வாய்ப்புண்டு. அதன்போது மல்றிவிற்றமின், கல்சியம் போன்ற சத்துணவுகள் வழங்கப்படுகிறது. அத்துடன், வெப்ப சமநிலையை பேணுவதற்காக கூடுகளுக்கு மேலாக தெளிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன.


பறக்கமுடியாத பறவை இனங்களில் தீக்கோழி, இமு, றூவைந சுhநயஇ புசயல (புசநயவநச) சுhநய ஆகிய பறவைகள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றின் முட்டைகள் உட்பட, பொதுவாக எல்லாப் பறவை இனங்களும் இனவிருத்தி செய்வதற்கான ஆய்வுகூடம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.


தாராக்கள் வாத்துப் பகுதியிலும் உலகில் மிக அபூர்வமான இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் றுழழன னுரஉமஇ ஆயடடயசன னுரஉமஇ ஆயனெயசin னுரஉமஇ புழழளநஇ டீடயஉம ளுறயnஇ டீடயஉம நேஉமநன ளுறயn முக்கியமானவையாகும். வலசப் பறவைகளாக வருகை தந்த ஒருவகைக் கொக்கு இனம் தாய்நாடு திரும்புவதற்கு மனமில்லாமல் இங்கேயே தங்கி தனது இனத்தைப் பெருக்கி வாழ்கின்றது.


காலை ஆறு மணிமுதல் மாலை ஆறு மணி வரை பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இங்கு பறவைகள் தொடர்பான பயண நினைவு சின்ன விற்பனைக் கூடமும் உள்ளது.


(இக்கட்டுரைக்கான தகவல்களை பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ரஷிகா வீரசேகர (செயற்பாட்டு முகாமையாளர் வழங்கியிருந்தார்)


Birds Park Hambantota is recognised as Asia's largest bird park and research centre. The park, spanning 35 acres, is home to variety of over 180 species including endemic species. The park is the ideal place for families, students and enthusiasts to study and observe these amazing and vibrant bird species.

 • image01
  image01

  Victoria Crown வகையைச் சேர்ந்த புறா

  Prev Next
 • image01
  image01

  கறுப்பு அன்னம்

  Prev Next
 • image01
  image01

  பஞ்சவர்ணக்கிளி

  Prev Next
 • image01
  image01

  தீக்கோழி

  Prev Next
 • image01
  image01

  பஞ்சவர்ணக்கிளி

  Prev Next
 • image01
  image01

  கொக்கு

  Prev Next