கிறில் உணவுகள்: புல்லரித்து ஏறும் சுவை
May 2018


பதமாக இதமாக அடுப்பில் சுட்டெடுத்த அறுசுவையும் தரும் டீரவவநசல புயசடiஉ புசடைடநன ஊhiஉமநn

எழுத்து: சுகந்தி சங்கர்


பசித்த போது உண்பதற்காக காடுகளில் கிடைத்தவற்றை ருசிபார்த்த, நாகரிகத்துக்கு முன்னைய காலத்தில் வாழ்ந்த மனிதன் முதல், உலகத்தையே உள்ளங்கைக்குள் உள்ளடக்கிக்கொண்டு நடமாடும் இன்றைய காலத்து மனிதன் வரை, உணவைச் சுவைத்து உண்டு புளகாங்கிதம் அடைகின்றான்.


வேட்டையாடிய விலங்குணவுகளை பச்சையாகப் புசித்தான். பின்னர் தீயில்ச்சுட்டு, ரசித்துச் சுவைத்தான். பின்னர் அதனுடன் தேங்காய்ச் சொட்டுச் சேர்த்துக் கடித்துச் சுவைத்தான். பின்னர், அதனுடன் மிளகாயைச் சேர்த்து உறைப்புச் சுவையை சுவைத்தறிந்தான்.


இன்னுமின்னும் வேறுவேறு சேர்மானங்களைச் சேர்த்து, அறுசுவைகளையும் சுவைத்து மகிழ்கின்றார்கள் மனிதர்கள்.


மனிதனின் நாகரிக வளர்ச்சிப் போக்கிலேயே, விதம்விதமான உணவுகளில் விதம்விதமான சுவைகளைப் பகுத்தறிந்து மகிழும் நாகரிக வளர்ச்சிப் போக்கும் பின்னிப்பிணைந்துள்ளது.


உறைப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, கயப்பு என வகுக்கப்பட்ட அறுசுவைகளையும் ஒரே உணவுக்குள் ஒன்றுசேரச் சுவைத்து, மனிதர்கள் இன்று பேரின்பம் கொள்கின்றார்கள்.


அன்றைய கால மனிதன் வேட்டையாடிய விலங்குணவை நெருப்பில் சுட்டு உண்ட உணவிலிருந்து, நாகரிக வளர்ச்சியடைந்த உணவுகளில் ஒன்றுதான் கிறில் வகை உணவு.


நல்லா தூவிய மசாலாவைகிறில்ட்சிக்கனின் மீது, எலுமிச்சைப்பழச் சாற்றைப் பிளிந்து,புளிப்பு, உறைப்பு சுவையுடன் கூடிய, ரோஸ்ட் ஆன, மேல் தோலோடு ஆவி வெளியில் வருமாறு வெந்த சிக்கனை, ஒரு கடி கடித்து, கடவாய்ப் பற்கள் இடையில் நாவினால் புரட்டிப்போட்டு, வாயை மூடிய படியே மென்று தின்றால், பூசிய மசாலாவும் எலுமிச்சைப்பழப் புளிப்பும் சோஸ் சுவையும் சேர்ந்து நாவின் ஓரங்களின் வழியே, மூளைக்கு ஒரு சுவை புல்லரித்து ஏறும்.


இந்தச் சுவை அனுபவத்தைத் கிறில்ட் சமையல் வகையினால் மட்டுமே தரமுடிகிறது. இடையிடையே வெட்டி வைத்த வெங்காய வட்டத்தைக் கடித்துக் கொண்டே சாப்பிட்டால், சுவையின் சொர்க்கம் தெரியும்.


நெருப்பில் சுட்டும், தந்தூரி அடுப்பில் தணலில் காட்டப்பட்டும் தயாரிக்கப்படும் இந்த இறைச்சிகள், எண்ணெய் பளபளப்புடனும், எலுமிச்சை, வெங்காயம், வெள்ளரிக்காயால் அலங்கரிக்கப்பட்டு, பார்க்கும்போதே நாவின் சுவையரும்புகள் தூண்டப்படும்.


எண்ணெயில் பொரிக்காமல், நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற நம்பிக்கை பொதுவாக உணவுப் பிரியர்கள் மத்தியில் காணப்படுகின்றது.


இறைச்சியில் மசாலா பூசி, ஒருநாள் பூராவும் அல்லது குறைந்தது ஆறு மணி நேரமாவது ஊற வைக்கப்படுகிறது. இதனுடன், சோஸ், பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்ற அனைத்தையும் கலந்து, அடுப்பில் வேகவைக்கப்படுகிறது.

இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை கிறில் முறையில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியம் தரும் எனப்படுகிறது. இந்த முறைச் சமையல், உணவில் இருக்கும் கொழுப்பை கரைத்துவிடும். எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக, கிறில் முறையில் சமைத்து சாப்பிடலாம்.


சிறிதளவு எண்ணெய் பயன்படுத்தியே அடுப்பில் வாட்டி எடுக்கப்படுகிறது. அதிக நேரம் வாட்டுவது, கொழுப்புச் சத்து உணவில் அதிகம் சேர்ந்துவிட காரணமாகிவிடும்.


இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை கிறில் முறையில் சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியம் தரும் எனப்படுகிறது. இந்த முறைச் சமையல், உணவில் இருக்கும் கொழுப்பை கரைத்துவிடும். எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக, கிறில் முறையில் சமைத்து சாப்பிடலாம்.


சுமார் 130 வரையில் கிறில் முறையில் தயாரிக்கக்கூடிய உணவு வகைகள் காணப்படுகின்றன. தர்ப்பூசணி முதல் சோளன்பொத்தி ஈறாக, இறைச்சி வகைகள், மீன் என வகையறாக்கள் காணப்படுகின்றன.


இருந்தபோதிலும், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற இறைச்சி வகைகளை நெருப்பில் வாட்டிச் சாப்பிடுவது கொழுப்பை கரைத்துவிடுவதுடன் உணவுக்கு நல்ல ருசியையும் தரும்.


பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் சுவையான கிறில் சிக்கனைச் சமைப்பதற்கு பெரிய துண்டுகளாக வெட்டிய கோழி இறைச்சி, இஞ்சி, உள்ளி ~பேஸ்ட்|, மிளகுத்தூள், சோயா சோஸ், தயிர், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, மசாலா, முட்டை, உப்பு, மிளகாய்த் தூள், எண்ணெய் ஆகியவையே கிறில் சமையலுக்குப் பொதுவாகத் தேவைப்படுவதாகும்.


கோழி இறைச்சியின் மீது கூரான கத்தியால், தசைப்பிடிப்புள்ள பகுதிகளில் வெட்டுகளைப் போட்டு, இறைச்சியின் மீது, மேலே கூறிய பொருட்களைச் சேர்த்துச் செய்த பேஸ்டைப் பூசி, குறிப்பிட்டளவு நேரம் ஊற வைத்து, எண்ணெய் சிறிது சேர்த்து, மைக்ரோ வேவ் ஓவனில் வைத்து, குறிப்பிட்ட நேர அளவுப்பிரமாணத்தின்படி, அதை வெளியே எடுத்து, சிக்கனை திருப்பி போட்டு, மீண்டும் அதேயளவு நேரத்துக்கு ஒவனில் வைக்க வேண்டும். பின்னர் சூடேறுவதற்கு முன்னர் பரிமாறி சுவைக்கவும்.


பிரபல ஹோட்டல்களில் ~கிறில்ட் ஸ்பெஷலிஸ்ட்| என்று சமையற்கலை நிபுணர் ஒருவர் பணியில் இருப்பார். அவரது பணி, மசாலா பூசுவது, சரியான வெப்பநிலையில் வேக வைப்பது, நேரம் பார்த்து கிறில்லைத் திருப்பி விடுவது, அவ்வப்போது ஓவனைத் திறந்து கிறில் மீது எண்ணெய் ஸ்பிரே செய்வது, நன்றாக வெந்த கோழியை இனம் கண்டு எடுப்பது, வெளியில் எடுத்த கிறில்ட் சிக்கனை, கத்தியினால் நேர்த்தியாக வெட்டி டிஸ்பிளே செய்வது, அதன்மேல் மசாலாத் தூளைக் கைதேர்ந்த கலைத்துவத்துடன் தூவுதல் போன்றவை அடங்குகின்றன. ஒரு சுவையான கிறில் உணவைத் தயாரிப்பதற்கு ஓரு சிறந்த, அனுபவம் மிக்க சமையற்கலை நிபுணரால்த்தான் இயலும்.


கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்கள் உட்படத் தாராளமாக, தரமான கிறில் உணவுவகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். பொதுவாக, தரமான கிறிலைப் பெற்றுக் கொள்வதற்கு தமது வர்த்தக நாமத்தை பாதுகாக்கும் தன்மையுடன் இயங்கும் உணவகங்களில் தரமான பொருட்களைக் கொண்;டு, தரமான முறையில் தயாரிக்கப்படும் கிறில்களையே உண்ண வேண்டும்.


Grilling is a method of cooking that involves a considerable amount of dry heat being applied both from below and above the surface of the food. It is a favourite amongst diners at restaurants and a popular preparation for family gatherings. Grilled dishes include vegetables, various types of meat and seafood. The flavours are further enhanced when the meat and vegetables have been marinated in spices and herbs, especially overnight or for usually six hours. Filled with tangy and succulent flavours, grilled food is usually served with garlic bread or rice, and slices of cucumber and lime or lemon. Special sauces are prepared to complement the dish. While restaurants specialise in serving grilled dishes, grilling is also considered a healthier method of preparing food.

 • image01
  image01

  நேர அளவுப் பிரமாணம், வெப்பநிலை இரண்டும் கிறில் உணவுகளில் முக்கியம்

  Prev Next
 • image01
  image01

  கிறில் வகை உணவு

  Prev Next
 • image01
  image01

  'தைமி' கிறில் சிக்கன்

  Prev Next