கோல்வ் விளையாட்டு: பச்சைப் புற்தரையில் பறந்து செல்லும் வெள்ளைப் பந்துகள்
June 2018


மனஒருமைப்பாடு, இலக்கு, சக்தியை ஒன்றுகுவித்தல் கோல்வ் இல் முக்கிய திறன்கள்

இலங்கையில் பல நூற்றாண்டு கால பழைமைமிக்க கோல்வ் விளையாட்டுஇ உலகப்பிரசித்தி பெற்ற பல உள்ளுர் வீரர்களை உருவாக்கியுள்ளதுடன்இ உல்லாசப் பயணிகளைக் கவர்ந்துஇ இலங்கைக்குப் பெயரையும் புகழையும் சிறப்பையும் ஈட்டித்தரும் ஓரு விளையாட்டாகப் பிரகாசிக்கின்றது.


எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: டீவு ஐஅயபநள


சிங்கப்பூரின் சிற்பி எனப் போற்றப்படும் லீ குவான் தனது வுhந ளுiபெயிழசந ளவழசல: ஆநஅழசைள ழக டுநந முரயn லுநற என்ற நூலின் 462ஆம் பக்கத்தில், இலண்டன் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்பும்போது, இரத்மலானை விமான நிலையத்தில் (1960களில் இலங்கையின் சர்வதேச விமான நிலையம் இரத்மலானை ஆகும்) வந்திறங்கியதாகவும் அப்போது பிரதம மந்திரியாகப் பதவி வகித்த டட்லி சேனநாயக்காவுடன் சேர்ந்து கொழும்பு கோல்ப் கிளப்பில் சுவாரசியமாக கோல்ப் விளையாடி மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.


குட்டி பிரித்தானியா| எனப் புகழப்படும் இலங்கையில் கோல்வ் விளையாட்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க, ஓர் உன்னதமான நிலையை, உலக மட்;டத்தில் கொண்டுள்ளதையிட்டு இலங்கை மண் பெருமை கொண்டுள்ளது. கோல்வ் விளையாட்டில் பிரித்தானியாவை அடுத்து, உலகில் மிகப் பழைமையான சம்பியன்ஷிப் போட்டியை நடாத்தும் பெருமையும் இலங்கைக்கு உண்டு. இதன் தொடர்ச்சியாகவே ~ஸ்ரீ லங்கன் கோல்வ் கிளாசிக்| சர்வதேசப் போட்டியும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 1891 ஆம் ஆண்டு, பிரித்தானியாவுக்கு வெளியே, முதலாவது அமெஞ்சூர் சம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


இவ்வாறு இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஈடிணையற்று, மூன்று கோல்வ் மைதானங்கள் அமையப்பெற்றுள்ளன. இவை மூன்றும் 18 துளைகள் கொண்ட மைதானங்கள் ஆகும். தலைநகர் கொழும்பிலும் கலாசார பாரம்பரிய நகர் கண்டியிலும் உல்லாசப் பயண நகர் நுவரெலியாவிலும் உலகப் பிரசித்தி பெற்ற கோல்வ் மைதானங்கள் அமைந்துள்ளன.


பிரித்தானியரின் கொலனித்துவ ஆட்சிக் காலத்தின்போது, கோல்வ் விளையாட்டு இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்பட்டாலும், அதற்கு முன்னர் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தின்போதிருந்தே, இலங்கையில் கோல்வ் விளையாடப் பட்டதற்கான தகவல்கள் காணப்படுகின்றன.


17ஆம் நூற்றாண்டில் காலிமுகத்திடலில் கோல்வ் விளையாடப்பட்டதாகவும் அதன் தொடர்ச்சியாகவே பிரித்தானியரால் கோல்வ் மைதானங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் கோல்வ் விளையாட்டின் தாய்ச்சொல், முழடக என
டொச் மொழிக்கு உரித்தானதாகவும் அதன் அர்த்தம் கழகத்தைக் குறிப்பதாகவும் காணப்படுகிறது.


பிரித்தானியாவுக்கு வெளியே இரண்டாவதாக 1879இல் அமைக்கப்பட்ட கோல்வ் மைதானம், கொழும்பு கோல்வ் மைதானம் ஆகும். இதற்கு முன்னர், கொல்கொத்தாவில் முதலாவது கோல்வ் மைதானம் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கோல்வ் வரலாற்றைக் கொண்ட இலங்கையில், தலைநகர் கொழும்பிலும் கலாசார நகர் கண்டியிலும் உல்லாசப் பயணநகர் நுவரெலியாவிலும் அமையப்பெற்றுள்ள கோல்வ் மைதானங்கள், உலகில் முதற்தரமானவையாகத் திகழ்வதுடன் உல்லாசப் பயணிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.


கொழும்பு கோல்வ் கிளப்புக்கு அக்காலப் பகுதியில் சொந்தமாக ஒரு மைதானம் இல்லாமல், சேர் சார்ல்ஸ் ஹென்றி டி சொய்சா என்பவருக்குச் சொந்தமான, அல்பிரட் விவசாய கால்நடைப் பண்ணையிலேயே விளையாடப்பட்டு வந்தது. இது கொழும்பின் மையப்பகுதியான பொரளையில் (கொழும்பு - 08) அமைந்திருந்தது. கொழும்பு கோல்வ் கிளப்பின் முதலாவது வருடாந்தக் கூட்டம், ஒன்பது உறுப்பினர்களுடன் 1880 இல் நடைபெற்றதாகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.


இக்கால கட்டத்தில் இலங்கையின் புதிய ஆளுநராகப் பதவியேற்று வந்த சேர் வெஸ்ட் றிஜ்வே, கோல்வ் விளையாட்டுப் பிரியராகத் திகழ்ந்தார். இவரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, 1896ஆம் ஆண்டு, அல்பிரட் விவசாயப் பண்ணை, கொழும்பு கோல்வ் மைதானமாக மாற்றப்பட்டது. பின்னர், 1928இல் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரினால், ~றோயல்| அந்தஸ்து வழங்கப்பட்டது.


இந்த கோல்வ் மைதானம் காலத்துக்கு காலம் அபிவிருத்தி செய்யப்பட்டு, சர்வதேச தராதரம் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 18 துளைகள் கொண்டமைந்த 5,998.5 மீற்றர் கறுப்பு ரீஸ், 5,753.5 மீற்றர் வெள்ளை ரீஸ் மற்றும் 4,742 மீற்றர் பெண்களுக்கான ரீஸ{ம் கொண்டமைந்துள்ளது.


இலங்கை உல்லாசப் பயணிகளைக் கவரும், விரும்பும் வகையில் பல பொக்கிஷங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த நாடாகும். அந்த வகையில் ~சந்தனமேடையின் சுந்தரவாசலைப் போல| இந்த கோல்வ் மைதானங்கள் இலங்கைக்கு உலகப் பிரசித்தியைப் பெற்றுக் கொடுக்கின்றன.


இந்த வகையில் மத்திய மலைநாட்டில் கண்டி, திகனவில் அமைந்துள்ள கோல்வ் மைதானமும் உலகத்தில் தனித்துவமான பண்புகளைக் கொண்டதாகும். இந்த கோல்வ் மைதானம், 517 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு, விக்ரோறியா நீர்த்தேக்கத்துக்கு அருகாமையில், இலங்கையின் மிக உயரமான மலையாகிய பீதுறுதாலகால மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இது உலகில் மிக அழகிய 100 கோல்வ் மைதானங்களுக்குள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளமை பெருமைக்குரியதாகும். இது 1920, 1930களில் உருவாக்கப்பட்ட போதும், 1998 காலப்பகுதியிலேயே சர்வதேச தரத்துக்கு அமைய அபிவிருத்தி செய்யப்பட்டதாகும்.


இவ்வாறே, இயற்கையழகு செழிக்கப்பெற்ற நுவரெலியாவில் அமைந்துள்ள கோல்வ் மைதானமும் கோல்வ் விளையாட்டுப் பிரியர்களைக் கவரும் வகையில் உலகப் பிரசித்தி வாய்ந்ததாகும். நானுஓயா புகையிரத நிலையத்திலிருந்து ஐந்து கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது.


இவற்றைவிட, இலங்கையின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ~மாபிள் பீச்சை| அண்டி, ஈகிள் கோல்வ் கிளப்பும் மலைநாட்டில் 1,499 மீற்றர் உயரத்தில் ~தியத்தலாவ கோல்வ் கிளப்பும்| இலங்கையில் பிரசித்தி பெற்ற கோல்வ் மைதானங்களாக இன்று அமைந்துள்ளன.


செல்வந்தர்களினாலும் பதவி அந்தஸ்தில் உள்ளவர்களினாலும் விளையாடப்படும் விளையாட்டாக அறியப்பட்ட கோல்வ், தற்போது ~இலங்கை கொல்வ் யுனியன்| இனால் பாடசாலை மட்டத்திலும் அறிமுகம் செய்யப்பட்டு, இளம் ~கொல்வ் சிங்கங்கள்| உருவாக்கப்படுகிறார்கள்.


Golf, a sport where its origins are traced to Scotland, was introduced to the island by the British. Known as a Gentleman's Game, Golf is a club and ball sport, where a player uses several clubs to hit balls into a series of holes on a course. One round of the game typically consists of 18 holes. Each hole has a "tee off” area, where the game begins. Sri Lanka has three fine 18-hole golf courses. The Royal Colombo Golf Club has an age-old history dating back to the 1880s, while the 517 acre Victoria Golf Club in Digana is a spectacular course amidst the hill country. The 100-acre Nuwara Eliya Golf Club is known to be the oldest golf course in the island. These courses attract golfers ranging from locals to tourists from many parts of the world.

 • image01
  image01

  கொழும்பு றோயல் கோல்வ் மைதானம்

  Prev Next
 • image01
  image01

  இலங்கை கோல்வ் மைதானங்கள் இயற்கையழகு நிரம்பப் பெற்று, உலகப்பிரசித்தி வாய்ந்தவை

  Prev Next
 • image01
  image01

  நுவரெலியா கோல்வ் மைதானம்

  Prev Next