தொப்பிகள் உணர்த்தும்உண்மைகள்
October 2018


அகன்ற விளிம்பையும் உயரமான மேற்பகுதியையும் கொண்ட 'கொம்பைன்' தொப்பி

அலங்காரங்களின் ஊடாக, அந்தஸ்தையும் குடும்ப கௌரவத்தையும் நிலைநாட்டும் பண்பாட்டின் அடிப்படையில், ஆடையினளவு முக்கியத்துவம் தலையில் அணியும் தொப்பிக்கு அக்காலகட்டங்களில் வழங்கப்பட்டிருந்தது.


எழுத்து: சுகந்தி சங்கர்


'நீங்கள் தொப்பி அணியும் பழக்கம் உள்ளவரா?" என்றொரு கேள்வியை உங்களிடம் கேட்டால், இன்றைய காலகட்டத்தில் 'இல்லை" என்றே அநேகர் பதிலளிபார்கள்.


ஆனால், அதுவே இரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கால கட்டமாக இருந்திருந்தால், 'ஆமாம்! ஆமாம்!!" என்ற பதிலே கிடைத்திருக்கும். அக்காலகட்டத்தில் இந்தக் கேள்விகூட அர்த்தமற்றதாக இருந்திருக்கும்.


ஏனெனில், 'நீங்கள் ஆடை அணியும் பழக்கமுள்ளவரா" என்ற கேள்வியை, இந்த நாகரிக உலகில் கேட்டால், எப்படி நகைப்புக்குரியதாக இருக்குமோ, அதேபோல்த்தான் அந்தக் காலகட்டத் திலும், அலங்காரங்களின் ஓர் அங்கமாக, அந்தஸ்தின் சின்னமாக தொப்பிகள் மதிக்கப்பட்டு வந்துள்ளன. தொப்பி அணியாமல் வீட்டைவிட்டுக் கிளம்புவது அவமானத்துக்குரிய ஒன்றாகக் கணிக்கப்பட்;டிருந்தது.


தொப்பியின் வரலாறு மிக நீண்டது. சுமார் 15,000 ஆண்டுகளுக்கு முன்னரே தொப்பியின் பாவனை இருந்ததற்கான ஆதாரம், மத்திய பிரான்ஸிலுள்ள லூஷாக் -லெஸ் ஷரெக்ஸ் குகை ஓவியங்கள் ஊடாக உறுதிசெய்யப் பட்டுள்ளது.


அழகியல் இரசனையுடன் தலையை அலங்கரித்துக் கொள்ளத் தொப்பிகளைப் பயன்படுத்;;;;;;;திய மனிதன், இலை, ஓலை, மரப்பட்டை, பறவைகளின் சிறகுகள், விலங்குகளின் தோல் போன்றவற்றை மூலப்பொருட்களாகக் கொண்டு அவற்றைத் தயாரித்தான்.துருக்கித்தொப்பி, வரித்தொப்பி, பின்னல் தொப்பி, ஒவல்தொப்பி, வட்டத்தொப்பி, சதுரத்தொப்பி, மற்றும் தொழில் சார் தகுதிநிலை, சமயம் சார் நம்பிக்கைகளை அடையாளப்படுத்துவனவாகவும் தொப்பிகள் விளங்குகின்றன.ஒவ்வொன்றும் வௌ;வேறு அமைப்புகளில் அதன் தோற்றத்தை வெளிப்படுத்தி, அழகாக, எடுப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.


வைபவங்கள், நிகழ்வுகள், களியாட்டங்கள், போட்டிகளின் போது, வகைவகையானதும் வர்ணமயமானதுமான தொப்பிகள் அணியப்படுகின்றன முக்கியமாக, மணமகன் அணியும் மாப்பிள்ளைத் தொப்பி, நடனவிருந்துகளின் போது அணியும் தொப்பி, விளையாட்டுப் போட்டிகளின் போது அணியும் தொப்பி, குழு அல்லது அணி சார் நடவடிக்கைககளின்போது அணியும் தொப்பி, இராணுவம் அணியும் தொப்பி, சாரணர் படைகள், மாலுமிகள் என சந்தர்ப்பம், சூழ்நிலை, காலநிலை, தொழில்நிலைக்கு ஏற்றவாறு தொப்பிகள் வகைப்படுகின்றன.

ஆங்கிலத்தில் ர்யவள என்றும் ஊயிள என்று தொப்பிகளின் அமைப்பை வைத்து இரண்டு வகை உண்டு. ஆனால், தமிழில் இரண்டையும் பொதுவாக தொப்பி என்;றே அழைப்படுகின்றது.


விளையாட்டுப் போட்டிகளின் போது அணியப்படும் தொப்பிகள் ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்றவாறு வேறுபடுகின்றன. கிரிக்கெட் விளையாட்டில், துடுப்பாட்டத்தின்போது அணியும் தொப்பி தலையின் முகத்தின் பாதுகாப்பை நோக்காகக் கொண்டும், நடுவர், பந்துதடுப்போர் அணியும் தொப்பிகள் வெய்யிலில் இருந்து தற்காப்பதாகவும் பேஸ்போல், றக்பி, கோல்ப், குதிரைப்பந்தயம், சைக்கிள் பந்தயம் போன்ற விளையாட்டுகளில் அணியப்படும் தொப்பிகள் விபத்துகளில் இருந்தும் சூரியஒளி, குளிர் போன்ற காலநிலைகளில் இருந்தும் பாதுகாக்கத் தக்கவாறு அமைந்துள்ளன. மேலும், போட்டிகளின்போது அணிகளை அடையாளம் காணத்தக்கவாறு தொப்பிகளின் வர்ணங்கள் ஊடாகவும் வேறுபாடு காண்பிக்கப்படுகிறது.


ஓன்றுகூடல்களின் போது, தொப்பிகள் காலநிலைகளுக்கு ஏற்பவும் ஒன்றுகூடலின் நோக்கத்தை வெளிப்படுத்தும் வகையிலும் விளம்பரப்படுத்தல் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு, தொப்பிகளின் வடிவங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.


இவற்றை விடவும் நடனநிகழ்வு களின்போது பயன்படுத்தும் வகைவகை யான தொப்பிகள் பயன்பாட்டில் காணப்படுகின்றன. 'போல்ரூம் டான்ஸ்' போன்ற நடனவகைகளுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகையான தொப்பிகள் பாவனையில் உள்ளன. தொப்பி அணிந்து ஆடும் நடனம், 'மெக்ஸிகன் தொப்பி நடனம்' பிரபல்யமானது.


பொதுவாக, அனைத்துத் தொப்பிகளின் வடிவங்களும் அவை உற்பத்தி செய்யப்பயன்படும் மூலப்பொருள்களும் காலநிலையைப் பொறுத்தும் எதற்காக அணியபடுகின்றது என்பதையும் பொறுத்துமே அமைகின்றன.


'பீச்' தொப்பிகள் சூரியஒளியிலிருந்து தலையையும் முகத்தையும் பாதுகாக்கக் கூடியவாறாக 'பீக்', 'பிரிம்' (பவுலர் ஹட் - டீழறடநச ர்யவ) பகுதிகளை கொண்டதாகவும் குளிர் காலநிலை நிலவும் நாடுகளில் பயன்படுத்தப்படும் தொப்பிகளில் 'கிரவுன்' பகுதி சற்று உயரம் கூடியதாகவும் (ரொப் ஹட் - வுழி hயவ) இருக்கும்.


பிரிம் பகுதி மூன்று கூம்புகளாக மடிக்கப்பட்டு இருப்பதால் 'ட்ரைகோன்' என்று ஒருவகைத் தொப்பியும் பீக் பகுதி சற்றுமுன் நீண்டு, சூரியஒளியிலிருந்து முகத்தைப் பாதுகாப்பதுபோல் காணப்பட்டால், அது பேஸ்போல் தொப்பி எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. சமயற்கலை நிபுணனின் தொப்பியில் 100 மடிப்புகள் வைக்கப்பட்டிருக்கும். அது முட்டையிலிருந்து 100 வகையான உணவுவகைகளைத் தயாரிக்க முடியும் என்பதை குறிக்கின்றது. இவ்வாறு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொப்பி வகைகள் காணப்படுகின்றன.


ஆங்கிலத்தில் ர்யவள என்றும் ஊயிள என்று தொப்பிகளின் அமைப்பை வைத்து இரண்டு வகை உண்டு. ஆனால், தமிழில் இரண்டையும் பொதுவாக தொப்பி என்;றே அழைப்படுகின்றது. தொப்பியின் நிறங்களுக்கும் ஒவ்வோர் அர்த்தங்களுண்டு. சிவப்பு நிறத்திலான தொப்பி உள்ளுணர்வு மற்றும் உணர்ச்சி பிரவாகத்தைக் குறிக்கும் தன்மைகொண்டது. அதேபோல், வெள்ளைத் தொப்பி, குறிக்கோள், மாசற்ற தன்மையைக் குறிக்கின்றது. பச்சைத் தொப்பி படைப்பாற்றல், புதிய முயற்சிகளையும் நீலத்தொப்பி சிந்தனை, செயற்பாட்டையும் பிரதிபலிக்கின்றன.


Hats, while offering protection from the natural elements, are also a fashion accessory that can make a statement. There are different styles of hats such as cowboy hats, straw hats, bowler hats and beautiful ladies hats each worn for various functions. Hats can be a stylish addition to enhance an elegant look for an evening, cruise, party, wedding or a chic protector from the sun at the beach or while playing golf. At events such as the British Royal Ascot accessorising your outfit with a beautiful hat is a tradition. The ladies hats worn on these occasions are elegant, adorned with flowers and other elements such as feathers. Today hats are designed with great flare and vivacity, which will brighten any look.

 

 

 • image01
  image01

  கூட்டுணர்வையும் பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் தன்மை தொப்பிகளுக்குண்டு

  Prev Next
 • image01
  image01

  தொப்பிகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

  Prev Next
 • image01
  image01

  மெக்ஸிக்கன் நடனத்தின்போது அணியப்படும் தொப்பி

  Prev Next
 • image01
  image01

  ரோஜா மலர் இதழ்களினால் அலங்கரிக்கப்பட்ட பிரித்தானிய மகாராணி அணியும் தொப்பி

  Prev Next
 • image01