கலைவண்ணம் காணும் கைவண்ணம் பீரளு லேஸ்
August 2018


வட்டம், சமாந்திரம், ~ஸ்கலொப்| ஆகிய மூன்று முக்கிய வடிவங்களில், பீரளு லேஸ்கள் தயாராகின்றன.

எழுத்து: சுகந்தி சங்கர் | படங்கள்: டீவு ஐஅயபநள


இலங்கையின் தென்மாகாணம், கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக பண்டையகாலம் முதற்கொண்டு மீன்பிடித் தொழில் அமைந்திருந்தது. கடலுக்குச் சென்ற கணவன்மார், திரும்பி வரும்வரை, கரைமேல் தவித்து நிற்கும் மனைவிமார், வேறுபணிகளில் கவனம் செலுத்தாமல், மணிக்கணக்காக சிலவேளை நாட்கணக்காக, ஓரிடத்தில் இருந்தவாறு, பீரளு ரேந்தை பின்னுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.


வரலாற்றுக் காலம் முதல் தொடர்ந்து வந்த இந்த வழக்கம், கரையோரங்;;களை அண்டிய பிரதேசங்களின் பொழுதுபோக்குப் பழக்கமாக மாறி, கொலனித்துவ ஆட்சிக் காலத்தில், மிகவும் செல்வாக்குச் செலுத்திய பீரளு ரேந்தை, கைத்தொழிலாகப் பரிணாம வளர்ச்சி கண்டது.


பின்னப்பட்ட ரேந்தைகள், ஆதிகாலத்தில் இருந்தே, ஆடை அலங்காரத்தில் ஓரங்கமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தமைக்கான தொட்டுணரக் கூடிய சான்றுகள், தேசிய நூதன சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பண்டைக்கால ஆடைகள் பிரிவில், பீரளு ரேந்தை அலங்காரப் பகுதியில், தேநீர் மேசை விரிப்புகள், (டிபோ) மேசை விரிப்புகள், ஜன்னல் - கதவு திரைச்சீலைகள், மேற்சட்டைகள், குழந்தைகளின் உடைகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பீரளு ரேந்தை பின்னும் குடிசைக் கைத்தொழில், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின்போது, மாபெரும் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்று, பொருளாதார நன்மைகள் ஈட்டிக் கொடுத்த ஒரு கைத்தொழிலாகக் காணப்பட்டமைக்கான ஆதாரங்கள், அவர்களின் அரச நிர்வாகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பீரளு ரேந்தை கைவினையைப் பொறுத்தவரையில், இலங்கை வரலாற்றின் கொலனித்துவ ஆட்சிக் காலம், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றே!


பண்டைக்கால மன்னர்கள் துட்டகைமுனு, கஜபா, பராக்கிரமபாகு, தேவநம்பியதீசன், காசியப்பன் ஆகியோர், பீரளு ரேந்தை பின்னல் கலை மீது, ஆர்வம் காண்பித்திருந்தார்கள். அவர்களின் மனைவிமார், பீரளு ரேந்தை அலங்கார ஆடைகளை, பட்டத்தரசி என்ற கௌரவத்துடனும் மிடுக்குடனும் அணிந்ததற்கான குறிப்புகள், இலங்கையின் தலைசிறந்த ஆராய்ச்சி அறிஞர்களின் நூல்களில் காணப்படுகின்றன. 'டீநநசரடய டுயஉந in யுnஉநைவெ ஊநலடழn' என்ற நூல் பீரளு ரேந்தை கைவினைக் கலையின் பல வரலாற்று ஆதாரங்களை ஒப்புவிக்கின்றது.


போர்த்துக்கேயர் கி.பி. 1505 இல், இலங்கையைக் கைப்பற்றிய பின் அந்த அரசாங்கத்தின் முழுமையான பார்வை மீன்பிடி, விவசாயத் தொழிற்றுறைகளின் அபிவிருத்தி குறித்தே இருந்தது. போர்த்துக்கேய அரச அதிகாரிகள் நாடு முழுவதும் பயணம் செய்து, கிராமமக்களைச் சந்தித்து, அந்த மக்கள் மத்தியில் பொருளாதார நன்மைகளைத் தரக்கூடிய தொழிற்றுறைகளை இனம்கண்டு, சுயதொழில் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஊக்கப்படுத்தினார்கள். அக்காலப்பகுதியில், போர்த்துக்கேயர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, ஊக்குவிக்கப்பட்ட ஒரு துறையாக பீரளு ரேந்தை பின்னும் கைத்தொழில் துறை காணப்பட்டது.


போர்த்துக்கேயரின் ஆட்சிக்குப் பின் வந்த, ஒல்லாந்தரும் பீரளு ரேந்தை (லேஸ்) ஆடைகளை அணிந்து, பெண்களின் அந்தஸ்தையும் கௌரவத்தையும் எடுத்துக்காட்டும் ஓர் ஆடைக் கலாசாரத்தை உருவாக்கிப் பின்பற்றினர். ஓல்லாந்தரில் சிலர், பீரளு ரேந்தை அலங்கார ஆடைகளை, வெளிநாட்டவருக்கு விற்கும் தொழிலில் பெரும் இலாபத்தை ஈட்டினர். இவை போன்ற தகவல்கள் ஊடாக, பீரளு ரேந்தையின் தனித்துவம் குறித்தும் வரலாற்றுக் காலத்தில் அதன் செல்வாக்கையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.


இன்று, வெலிகம, மாகால்ல, மிரிஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் பீரளு ரேந்தை பின்னும் துறை, குற்றுயிரும் குறையுயிருமாக தவித்துக் கொண்டிருக்கின்றது. வம்சம் வம்சமாக, ஓரு சில குடும்பங்களால் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தத் கலை, அரசாங்கம் மற்றும் அரச சாரா அமைப்புகளின் நடவடிக்கைகளால் ஓரளவு உயிர்வாழுகிறது.


பாரம்பரிய உள்ளுர் உற்பத்திகளுக்கு நல்ல சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்குச் சுற்றுலாத்துறை பெரிதும் உதவுகின்றது. அந்தவகையில், நாட்டின் தென்பகுதிகளுக்கு விஜயம் செய்யும் வெளியூர் - உள்ளுர் உல்லாசப் பயணிகள், ஆர்வம் காட்டி பீரளு லேஸ் அலங்காரங்களைக் கொள்வனவு செய்யும் நிலை உள்ளது.


காலி, மாத்தறை வீதியில் வெலிகம பிரதேசத்தை அண்டிய வீதியின் அருகே அமைந்துள்ள அநேகமான வீட்டு வாசல்களில், பீரளு ரேந்தை பின்னிக்கொண்டிருக்கும் பெண்களைக் காணலாம்.


கதிரை அல்லது ஸ்ரூளில் இருந்துகொண்டு, அதைவிட உயரமான ஸ்ரூளில் தலையணை போன்ற அமைப்பில் (கொட்ட), இருப்பதற்கு எதிர் பக்கத்தில், சிறிய உறுளையில் (கொட்ட போள) ஏற்றப்பட்ட குண்டூசிகளுக்கு இடையில், இளையோடும் நூல்கள், பீரளு காய்களுடன் இணைக்கப்பட்டு இருக்கும். பீரளு கட்டைகளை இடம்வலமாகவும் வலமிடமாகவும் இடம்; மாற்றும்போது, இதனுடன் இணைக்கப்பட்ட நூல்கள் குண்டூசியுடன் பின்னிக் கொண்டு அழகிய, அலங்காரங்கள் நிறைந்த லேஸ்கள் உருவாகின்றன.


பீரளு மரக்கட்டைகள், இரண்டு முதல் ஐந்து அங்குலம் நீளம் கொண்டுள்ளவையாகவும், எளிமையான அலங்காரங்களுக்கு வர்ணம் தீட்டப் பட்டவையாகவும், பளபளப்புடனும் காட்சி தருகின்றன. பீரளு கட்டைகளை பத்துவிரல்களாலும் பந்தாடி, இலாவகமாக இடம்மாற்றும் கலைத்துவம்மிக்க காட்சி கண்கொட்டாமல் பார்க்கக் கூடியதாகும்.


சதுரறூள் காகிதத்தில் வரைந்த அலங்கார வடிவத்தில், துளைகள் செய்து, காகிதத்தை உறுளையின் மீது, பொருத்தமாக இணைப்பார்கள். அந்தத் துளைகள் மீது, குண்டூசிகள் குற்றி, நூல்களால் தொடுக்கப்பட்டு, நூல்கள் பீரளு காய்களுடன் இணைக்கப்படும். அலங்காரங்களுக்கு ஏற்றவாறு, பீரளு காய்களின் எண்ணிக்கைகள் 16, 18, 32, 40 என நூல்கூட்டங்களாப் பிரிக்கப்பட்டு வலமிடமாகவும் இடம்வலமாகவும் இடமாற்றப்படுகின்றன.


வெலிகம பிரதேசத்தில் தற்போது 200க்கும் குறைவானவர்கள் பீரளு லேஸ் பின்னும் குடிசைக் கைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்கள் அனைவரும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள். பீரளு லேஸ் பின்னுவது தொடர்பான ஆர்வம், இளைய தலைமுறையினரிடம் இல்லாத காரணத்தால், இதன் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.


உழைப்புக்கு ஏற்ற வருமானம் இல்லாமையும், பயிற்சியால் வந்த அனுபவ முதிர்ச்சியும் ஒருமுகப்பட்ட மனநிலையும் பீரளு ரேந்தை பின்னுவதற்கான அடிப்படைத் தகுதிகளாகும்.


காலாகாலமாக, பரம்பரை பரம்பரையாகக் கற்றும் போதித்தும் வந்த, தனித்துவமும் சிறப்பும் பெற்ற ஒரு கலாசார பாரம்பரியக் குடிசைக் கைத்தொழிலின் எதிர்காலம் குறித்த ஆதங்கம், அனைவருக்கும் உண்டு.


வெலிகம நகரசபைக் கூடாக, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையில் அங்கத்துவம் வகிக்கும் பி.பி. ஆரியவதி, இக்கட்டுரைக்கான தகவல்களை வழங்கியிருந்தார்.


Beeralu weaving was very much part of the culture of the southern coasts, especially in Galle, Matara, Weligama, Mirissa and Magalle dating back to the 15th and 16th centuries. It is believed that the Beeralu weaving was introduced to Sri Lanka by the Dutch but first taught by the wives of the Portuguese colonisers to noble women of the Sri Lankan courts, who remained in Sri Lanka from the early 1500s to the mid 1600s. Sri Lanka's southern lace makers have their own version of the origins of their craft, which is passed onto generations. The learning of this craft requires great patience and attention to detail in producing intricate and elaborate designs. Even today, this exotic craft is taken forward through generations.

 • image01
  image01

  பீரளு கட்டைகள், குண்டூசிகள், நூல்கள், தலையணை உறுளை ஆகியவை உள்ளடங்கிய எளிய தொழிற்பட்டடை.

  Prev Next
 • image01
  image01

  தலையணை உறுளையில் பொருத்தப்பட்ட துளையிடப்பட்ட தாளில் ஏற்றப்பட்டுள்ள குண்டூசிகளுக்கு இடையில், இழையோடும் நூல்கள்.

  Prev Next
 • image01
  image01

  காலத்துக்கேற்ற மாற்றங்கள் இன்றி, பாரம்பரிய முறைகள் பேணப்படுகின்றமை தனித்துவமானது.

  Prev Next