'பாஸ்ட்பூட்ஸ்' யுகத்தில் பெண்களுக்கு ஜிம்மின் அவசியம்
June 2017


ஜிம்மின் முழுமையான பலனை ஆடைகளும் அணிகளும் தீர்மானிக்கின்றன

எழுத்து: சுகந்தி சங்கர்


மகாஅலெக்ஸாண்டர் மகாவீரன்; உலகத் தைக் கட்டி ஆளும் வல்லமையை நிரூபித்தவன்; அவன் ஒரு சந்தர்ப்பத்தில்இ 'பெண்களுக்கு கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை யாதெனில்இ இந்த உலகத்தில் உள்ள அத்தனை அழகுசாதனப் பொருட்களும் உள்ள ஓர் அறையில்இ கண்ணாடி மட்டும் இல்லாமல் ஒரு பெண்ணைத் தங்கவைத்து விடுவதாகும்" என்று கூறியிருந்தான். இது ஓர் உளவியல் ரீதியிலான தண்டனை. காரணம் பெண்கள் இயற்கையாகவே அழகை விரும்புபவர்கள்; அழகை இரசிப்பவர்கள்; அழகாய் இருப்பதில் ஆனந்தம் அடைபவர்கள். பொருத்தமான அழகு சாதனத்தினால் தன்னை விதம்விதமாக அழகுபடுத்திய பின்னர்இ கண்ணாடியின் முன் நின்று அந்த அழகை இரசிப்பதுஇ பெண்மையின் இயல்புகளில் ஒன்று.


அழகாக இருக்க வேண்டும் என்பதற்காகஇ பெண்கள் எத்தனையோ வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். அவை இயற்கையாகக் கிடைக்கக் கூடியது மட்டுமல்லாதுஇ செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதாகவும் இருக்கும்; அதைவிட நமது நாட்டுக்கே உரித்தானதாகவோ அல்லது மேலைத் தேசத்துக்கு உரித்தானதாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் நமது அழகை மெருகூட்டுவதாகவும் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத பண்பு மிக்கதாகவும் இருக்க வேண்டியதைத் தெரிவு செய்ய வேண்டியது அவசியம்.


இன்றைய காலம்இ பொருளாதாரத்தை மையமாகக் கொண்டுஇ மின்னல் வேகத்தில் இயங்கும்இ ~பாஸ்ட் பூட்ஸ்| காலம். இந்தக் கால மாற்றத்துக்கும் ஓட்டத்துக்கும் ஈடுகொடுத்துக் கொண்டுஇ உடலழகைப் பேணுவதற்கு மிகச் சிறந்த வழிமுறைகளில் ஒன்றாக இருப்பது ~ஜிம்| ஆகும்.


விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளின் பலனாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களின் துணைகொண்டுஇ உடலழகைப் பெற்றுக் கொள்வதும் அவ்வாறு பெற்றுக் கொண்ட அழகை நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக்கொள்வதும் உடல் ஆரோக்கியத்தை நிரந்தரமாகப் பேணுவதும் ~ஜிம்| முறைமையிலான உடற்பயிற்சியின் அடிப்படை குறிக்கோள்கள் ஆகும்.

உடலுக்குக் கடினமில்லாத, எளிதாகச் செய்யக்கூடிய பயிற்சிகள் இருப்பதால் பெண்கள் அதிகளவில் உடலை வருத்தாமல் 'ஜிம்' பயிற்சிகளில் ஈடுபடலாம். பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலிகளை இந்தப் பயிற்சிகள் குணமாக்கிவிடுகின்றன.


உடலின் எந்தப் பகுதிக்கு எவ்வாறான பயிற்சியை அல்லது சிகிச்சையை எந்த இயந்திரத்தின் மூலம் அளிக்கலாம் என்பதனை விஞ்ஞான ரீதியிலான அணுகுமுறையினூடாகச் செய்வதுஇ ~ஜிம்| உடற்பயிற்சி முறையின் தனித்துவமாகும்.


வயிறுஇ கால்கள்இ கைகள் ஆகிய இடங்களிலுள்ள தசைகளைக் குறைத்துஇ ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் ~ஜிம்| ஒரே தடவையில் வழங்குகின்றது. முறையான ~ஜிம்| பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சியை மேற்கொண்டால் மூன்று மாதங்களுக்குள் உடல் அழகும் கவர்ச்சியும் பெற்று ஜொலிக்கும் மாற்றத்தை அவதானிக்க முடியும்.


இவ்வாறு பெண்களுக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கவர்ச்சியையும் ~ஜிம்| அவர்களுக்கு வழங்குவதுடன்இ தக்க பாதுகாப்பையும் வழங்குகின்றது. பெண்களின் பாதுகாப்புக் குறைந்துவரும் இக்காலகட்டத்தில்இ அவர்களின் உடல் வலிமையாக இருக்கவேண்டியது அவசியமாகும். ~ஜிம்|மில் உடல்வலிமை தரக்கூடிய பல பிரத்தியேகமான பயிற்சிகள் உள்ளன.


நகரங்களில் ~ஜிம்| பயிற்சி நிலையங்கள் தாராளமாக உள்ளன. நகர்ப்புறக் கிராமங்களிலும் ~ஜிம்| பயிற்சி நிலையங்கள் இயங்கத்தொடங்கி விட்டன. பெண்கள் இப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டால் ~ஜிம்| உடற்பயிற்சியின் முழுமையான பலன்களைப் பெற்றுக் கொள்ளலாம். அனேக ~ஜிம்| பயிற்சி நிலையங்களில் மகளிருக்கெனத் தனியான பிரிவுகள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் மகளிர் உடற் பயிற்சியாளரின் துணையையும் பெற்றுக்கொள்ள முடியும். ஏரொபிக்ஸ்இ பளு-தூக்குதல்இ கார்டியோஇ உடலை நீட்டி வளைத்துச் செய்யும் ஸ்ட்ரெச்சிங் போன்ற பயிற்சிகள் பெண்களுக்கு மிகவும் ஏற்றவை.


உடலுக்குக் கடினமில்லாதஇ எளிதாகச் செய்யக்கூடிய பயிற்சிகள் இருப்பதால் பெண்கள் அதிகளவில் உடலை வருத்தாமல் ~ஜிம்| பயிற்சிகளில் ஈடுபடலாம். பொதுவாகப் பெண்களுக்கு ஏற்படும் உடல் வலிகளை இந்தப் பயிற்சிகள் குணமாக்கிவிடுகின்றன.

ஆபரணங்களை அணிந்து கொண்டும் பயிற்சியில் ஈடுபடுவதையும் தவிர்த்துவிட வேண்டும். முக்கியமாக பெண்கள் தங்களுடைய தலைமுடியை குறுகலாகக் கட்டி, பயிற்சிக்குத் தடங்கலில்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். .


வெறும் வயிற்றுடன் ~ஜிம்| பயிற்சி செய்வது உடலுக்கு நல்லதல்ல; கட்டாயம் ~ஜிம்| பயிற்சி செய்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர்இ உணவு உட்கொண்டிருக்க வேண்டும். சிறிதளவான சோறுஇ மரக்கறிவகைகள்இ பழ ஜூஸ் போன்ற உணவு வகைகளை உட்கொள்வது உடலுக்குச் சிறந்த கலோரியை வழங்கும். குறிப்பாக புரதம் நிறைந்த உணவு வகைகளைத் தேர்ந்தெடுப்பது நன்று. வாழைப்பழம் நல்லதொரு சத்துமிக்க பழமாகும். வாழைப்பழத்திலிருந்து உடலுக்குத் தேiயான குழுக்கோஸை உடனடியாகப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.


பொதுவாகஇ அனேகர் காலைவேளையில் வெறும் வயிற்றுடன்தான் ~ஜிம்| பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள். வெறும் வயிற்றுடன் பயிற்சியில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.


அடுத்து முறையாக ~ஜிம்| பயிற்சிக்கு ஏற்ற உடைஇ காலணி என்பவற்றையும் கட்டாயம் அணிய வேண்டும். ~ஜிம்|மிற்கு என்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடைஇ அணிகளை அணிந்து கொண்டு அந்தப் பயிற்சியில் ஈடுபட்டால்த்தான் ~ஜிம்| இன் முழுமையான பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.


இங்கு இன்னொரு முக்கியமான விடயத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவதுஇ நீங்கள் உள்ளரங்கிலா? அல்லது வெளியரங்கிலா? பயிற்சிகளில்ஈ டுபடப்போகின்றீர்கள் என்பதையும் எத்தகைய பயிற்சிகளில் ஈடுபடப் போகின்றீர்கள் என்பதையும் பொறுத்தே ஆடை அணிகளைத் தெரிவு செய்து கொள்ள வேண்டும்.


குறிப்பாகஇ ஓடுவதற்கான பயிற்சியா? அல்லது சாதாரண பயிற்சியா செய்யப் போகின்றீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் காலணியைத் தெரிவு செய்வது தங்கியுள்ளது. பயிற்சியின் போது நரம்பு நாளங்களுக்கான இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தன்மை இந்த ஆடை அணிகளுக்கு உண்டு. அத்துடன் ஆபரணங்களை அணிந்து கொண்டும் பயிற்சியில்ஈ டுபடுவதையும் தவிர்த்துவிட வேண்டும். முக்கியமாக பெண்கள் தங்களுடைய தலைமுடியை குறுகலாகக் கட்டிஇ பயிற்சிக்குத் தடங்கலில்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ~ஜிம்| பயிற்சியை பொதுவாகப் பெண்கள் உடலை அழகாக வைத்திருக்கும் நோக்கத்துக்காகவோ அல்லது உடல் திடகாத்திரமாகவும் கட்டுமஸ்தாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக ~ஜிம்| உடற் பயிற்சியை தெரிவு செய்கின்றார்கள். பெண்கள் கருத்தரித்திருந்தாலும் மருத்துவரின் ஆலோசனையைப் பின் பற்றி உடற்பயிற்சியில் ஈடுபட முடியும். இவர்களுக்கு பிரசவம் இலகுவாகவும்இ பிரசவத்தின் பின்னர் வழமைக்குத் திரும்புவது வெகுசீக்கிரமாகவும் இருக்கும்.


ஜிம் பயிற்சிகளினால் ஏற்படும் நன்மைகளை பின்வருமாறு பட்டியலிடலாம்.
1. உடல் ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பெறுகின்றார்கள்.
2. ஞாபக சக்தி அதிகரிக்கின்றது.
3. புற்றுநோயை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை அகற்றும்
4. செயற்பாட்டுத் திறன் அதிகரிக்கின்றது
5. தன்னம்பிக்கை அதிகரிக்கின்றது.
6. மனநிலையை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க உதவும்.
7. நீரிழிவு மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களில் இருந்து விடுதலையளிக்கின்றது.


உடல்இ உள ரீதியாக ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள்இ தமது குடும்பத்தையும் தமது அலுவலகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை (இக்கட்டுரைக்குத் தேவையான தகவல்களை டீவு யுஉவiஎந இல் குவைநௌள Pசழ ஆக கடமையாற்றும் மொஹமட் பாஹிம் வழங்கியிருந்தார்).


Fitness is essential for both men and women. It is vital to follow a proper routine to keep fit, especially women can fight against cardiovascular diseases, improve mental fitness and memory power with various forms of exercise such as aerobics, cardio and stretching. It is advisable to follow a balanced diet with sufficient amount of proteins and other nutrients. Head to the gym to burn those extra calories and keep fit! Information provided by Mohamed Fahim, Fitness Pro at BT Active


 • image01
 • image01
  image01

  நிபுணத்துவ ஆலோசனையும் உணவுக் கட்டுப்பாடும் வசீகரம் வரும் வழிகளாகும்

  Prev Next
 • image01
  image01

  நாளொன்றுக்கு 45 - 55 நிமிட 'ஜிம்' பயிற்சி போதுமானது; எட்டு மணிநேர தூக்கம் அவசியமானது.

  Prev Next
 • image01
  image01

  'ஜிம்' பயிற்சிகள் உடலின் சக்தி அளவுகளை அதிகரித்து, உடற்கலங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சீர் செய்கின்றன.

  Prev Next