இலங்கை மண்ணின் வாசம் கமழும் அலங்கார வடிவங்கள்
March 2018


கழுத்துப் பிணைந்த இரட்டை அன்னப்பட்சி

எழுத்து: சுகந்தி சங்கர்


இயற்கையின் அழகையும் தாற்பரியங்களையும் தனித்தன்மை, புனிதம், சௌபாக்கியம் பௌத்த மதத்தின் பெருமை, ஆகியவற்றின் குறியீடுகளாக பண்டைக்கால சிங்களக் கலையின் அலங்கார வடிவங்கள் உள்ளன.


கருத்தாழமும் வற்றாத கற்பனை வளமும் நிறைந்துள்ள அலங்காரங்கள், இலங்கையின் கலைவடிவங்களுக்குப் பெருமை சேர்க்கின்றன.


கற்கள், உலோகம், மண், மரம் போன்றவற்றில் சிற்ப வேலைப்பாடுகளினாலும் வரைதல் வேலைப்பாடுகளினாலும் வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த அலங்காரக் கலைவடிவங்கள் வெளிப்படுத்தும் பாங்கு, மங்களகரமானவையாக மிளிர்வதால் மரபுவழி அலங்காரங்களாகத் திகழ்கின்றன.


உதாரணமாக, சிற்பம், ஓவியம், வரைதல், ஆபரணங்கள் முதலிய கலைகளில் அன்னப் பட்சிக்கு முக்கிய இடம் உண்டு. பௌத்தர் களுக்கு மட்டுமன்றி இந்துக்களுக்கும் அன்னப்பட்சி மங்களமான ஒன்றாகும். இதனால் பௌத்த வழிபாட்டுத்தலங்களில் காணப்படும்அ லங்காரங்களிலும் பண்டைக்கால அரண்மனைகள் உட்பட இல்லங்களின் வாசல்களிலும் ஆபரணங்களிலும் அன்னப் பட்சியின் உருவம் வெகுவாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கற்பனை வளத்துடன் கையாளப்பட்டுள்ளன.


இத்தகைய சிங்களப் பாரம்பரிய அலங்கார வடிவங்கள் வெளிப்படுத்தும் பண்புகளின்படி இவற்றை ஐந்து வகைப்படுத்த முடியும்.


தேவர் - சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தர்மசக்கரம் ஆகிய வடிவங்கள்.

விலங்கு - சிங்கம், யானை, குதிரை, மயில், வாமனம், சங்க நிதி - பதுமநிதி குள்ளர், நடன மகளிர், பெண்கள், அன்னம்

தாவரம் - மலர்கள், கொடி, இலை, மொட்டு

பௌதீகம் - நேர் கோடுகள், வளைகோடுகள் (கேத்திரகணித வடிவங்கள்)

கற்பனை வடிவங்கள் - கஜசிம்மம், மகரம், நரசிம்மம், அத்கண்ட லிஹினிய, சப்த நாரிகள், அத்த நாரிகள், இருதலைப்பட்சி முதலான பல உருவங்கள்.


தலை இணைந்த இரட்டை அன்னப் பறவை அலங்காரம், ஹன்ஸ பூட்டுவ (ர்யளெய Pரவவரறய), என சிங்கள மொழியில் அழைக்கப்படுகின்றது. கேந்திர கணித வடிவங்கள் லியவெல்ல (டுலையறநடய), அன்னாசிமல (யுnயௌi ஆயடய), பாலப்பெதி (Pயடயிநவாi), நாரீலதாமல (யேசடையவாய ஆயடய), கல்பிந்துவ (புயட டீiனெரறய), பஞ்ஞநாரிஹே (Pயnஉhயயெசiபாயவந) ஆகியவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பண்டைக்காலத்து கலை வெளிப்பாடுகளில் மட்டுமல்ல, இற்றைய கால நவீன கலை வெளிப்பாடுகளிலும் மேற்குறிப்பிட்ட அலங்கார வடிவங்கள் முன்னிலையில் திகழ்கின்றன.


எம்பெக்க தேவாலயம், கண்டி தலதா மாளிகை, பொலன்னறுவையிலுள்ள அதன் இராசதானிச் சுவடுகள், அநுராதபுரத்தில் இருக்கும் பண்டைக்கால புனித நினைவுச் சின்னங்களிலும் கலைப்படைப்புகளிலும் மேற்குறிப்பிட்ட வடிவங்கள் அதிகளவில்பயன் படுத்தப்பட்டுள்ளன. இவற்றை விட, இன்றைய காலகட்டங்களிலும் இல்லங்களின் வாசல் அலங்காரங்களாவும், ஆடைகளில் பிரதான கலை மரபாகவும் அதேபோல்; ஆபரண அணிகலன்களிலும் இத்தகைய அலங்கார வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. முக்கியமாக இங்கு கவனிக்கத்தக்கது இத்தகைய சிங்களப் பாரம்பரிய அலங்கார வகைகளை வெளிப்படுத்தும் படைப்புகளுக்கு கேள்வியுடன் கூடிய சந்தை வாய்ப்புகள் அதிகளவில் காணப்படு கின்றன. இத்தகைய கலைப்படைப்புகள் உல்லாசப் பயணிகளினால் விரும்பி அவர்களது நாட்டுக்கு எடுத்துச் சென்று, பெருமைபேசும் நடைமுறையும் அவதானத்துக்குரியது.

மேற்குறிப்பிட்ட அலங்கார வகைகளின் தனித்துவங்களை தனித்தனியாக நோக்குவோம்:


ஹன்ஸ பூட்டுவ (ர்யளெய Pரவவரறய)
கழுத்துப் பிணைந்த இரட்டை அன்னங்கள் நேர்த்தியாகவும் அழகாகவும் அளவுப் பெறுமானம் அச்சொட்டாகவும் படைக்கப்பட்டிருக்கும். அன்னம் பாலையும் தண்ணீரையும் பகுத்தறியும் இயல்பைக் கொண்டதனால் அன்னத்தின் அடையாள சின்னம், வாழ்க்கையில் நன்மையைத் தீமையிலிருந்து இனங்கண்டு வாழ்வதற்கான உந்துதலையும் வல்லமையையும் வழங்குகின்றது. அதுமட்டுமன்றி பெண்மையின் நளினத்துக்கும் அன்னமே குறியீடாக உள்ளது.


நாரீலதாமால (யேசடையவாய ஆயடய)
அசாதாரணமான கற்பனையையும் கலையம்சத்தையும் வெளிப்படுத்தும் அலங்காரமாக நாரிலதா அலங்காரம் உள்ளது. ஏழு பெண்கள் காவும் பல்லக்கின் உருவம் சப்தநாரி பல்லக்கு எனவும் அதனிலும் மேம்பட்ட படைப்பாக நவநாரி குஞ்சரிய உருவமும் விளங்குகின்றன. இதில் ஒன்பது பெண் உருவங்களைக் கொண்டு ஒரு யானை உருவகிக்கப்பட்டுள்ளது. மலர் வடிவம் பெண்மையின் அம்சங்கள் பொருந்தியவை என்பது இதன் தாற்பரியமாகும். யானைத் தந்தம், பித்தளை வேலைப்பாடுகள், சுவரோவியங்களில் இந்த அலங்கார வடிவங்களைப் பொதுவாகக் காணலாம்.


பாலப்பெதி (Pயடயிநவாi)
கற்பனைத் திறனுடன் கூடிய கேத்திரகணித நுட்பங்கள் இந்த அலங்காரங்களுக்கு முக்கியமானவை. இரட்டை உருவங்களைச் சித்தரிக்கும் வடிவங்கள் சமச்சீர் தன்மையையும் நேர்கோடுகளால் ஆன வடிவங்கள் கேத்திர கணித நுட்பத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. சந்திரவட்டப் படிக்கல், மட்பாண்ட வேலைகள், லாக்ஷய, ஓலைச் சுவடிகள், யானைத் தந்தம், கொம்பு, உலோக வேலைப்பாடுகளில் பனாவ, கல்பிந்து, நீரலை, பத்துறு, குந்திரீகம், தனியிழை, ஈரிழை, ஹவடிய, அரும்பு, பலாபெத்தி, கலச, சுழிவெல போன்ற உயிரற்ற வடிவங்கள் உள்ளடங்குகின்றன.


அன்னாசிமால (யுnயௌi ஆயடய)
அன்னாசி மலர், சப்பு மலர், செங்கழுநீர், கடுப்புல்மலர், கத்தரி மலர், மல்லிகை மலர்கள் இந்தவகைக்குள் அடங்குகின்றன. மலர் அலங்காரம் கண்டி, கம்பளை இராச்சிய காலப்பகுதி கலைப்படைப்புகளில் இடம்பெற்றுள்ளது. இலங்கையில் பௌத்த மதவழிபாடுகளில் முக்கிய இடம்பெறும் மலர் அலங்கார வடிவங்கள் செதுக்கல் வேலைப்பாடுகள், சிற்ப வேலைப்பாடு, மற்றும் சுவரோவியங்களில் மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பூவிதழ்களுடன், நேர்கோடு, வளைகோடு, பூச்சியம், புள்ளிகள் போன்ற அம்சங்களையும் சேர்க்கின்றனர்.


பஞ்ஞநாரிஹே (Pயnஉhயயெசiபாயவந)
மங்களம், செல்வம், வலிமை, சக்தி ஆகியவற்றை வழங்கவல்ல வடிவங்களாகக் கற்பனை உருவங்களை உபயோகித்துள்ளனர்.


லியவெல்ல (டுலையறநடய)
சந்திரவட்டக்கல் பல கலைகளின் பொக்கிசமாகத் திகழ்கின்றது. அநுராதபுரக்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகமாகிய சந்திரவட்டப் படிக்கல்லில் யானை, குதிரை, எருது, சிங்கம், அன்னம் முதலான ஐந்து வகையான விலங்குருவங்களையும் பலாபெத்தி, லியவெல அலங்காரங்களையும் காணலாம்.


(இக்கட்டுரைக்கான தகவல்களை பிரபல சிங்கள அலங்காரக் கலை வல்லுநர் நவி சமரவீர தந்துதவியிருந்தார்)


Traditional Sinhalese motifs are a heritage of the island, passed down by generations of artisans since as far back as the Anuradhapura Era. The most popular Sinhalese motifs that have been celebrated through the centuries are the Hansa Puttuwa, Narilatha Mala, Palapethi, Annasi Mala, Panchanarighate and Liyawela. Each design, which is distinctively Sri Lankan, has a specific meaning and purpose. Likewise, the Sinhalese motifs have since ancient times been used to embellish the walls of temples, palaces and structures of historical importance. The best of these designs can be found at historical sites in Anuradhapura, Polonnaruwa and Kandy, especially the wood carvings in Embekka Devalaya and the sculptures at Sri Dalada Maligawa in Kandy.

 • image01
  image01

  பாலப்பெதி வடிவங்கள் அமைந்த சந்திரவட்டப்படிக்கல்

  Prev Next
 • image01
  image01

  கொடிகள், பூமொட்டுகள் இணைந்த வடிவம்

  Prev Next
 • image01
  image01

  அன்னாசிமால புடைப்புச் சி;ற்பம்

  Prev Next